அவசரத்துக்கு ஒதுங்கச் சென்ற விதவைப் பெண்; சிதைந்து ரத்த வெள்ளத்தில் கண்ட உறவினர்! வெளிவந்த அதிர்ச்சிப் பின்னணி

Report Print Ragavan Ragavan in தெற்காசியா
499Shares

இந்தியாவின் வட மாநிலத்தில் மலம் கழிக்க வெளியே சென்ற விதைவைப் பெண்ணை 3 பேர் சேர்ந்து கற்பழித்து, பெண்ணுறுப்பை சிதைத்துள்ள சமத்துவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

இந்திய மாநிலம் ஜார்கண்டில் 50 வயது மிக்க விதவை பெண் ஒருவர் மலம் கழிப்பதற்காக இரவு 10 மணியளவில் வெளியே சென்றுள்ளார். ஆனால் திரும்பி வீட்டுக்கு வரவே இல்லை.

அவர் சென்று பல மணிநேரங்கள் ஆகியும் வீட்டுக்கு திரும்பி வராததால் பதற்றமடைந்த உறவினர்கள், அவரைத் தேடிக்கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது, அவர் ரத்த வெள்ளத்தில் ஒரு குட்டைக்கு அருகே மயங்கிக் கிடைந்ததைப் பார்த்த அவரது உறவினர்களுக்கு தூக்கி வாரிப்போட்டது.

உடனடியாக அவரை ஹண்டர்கஞ்ச் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரது நிலைமை மோசமாக இருந்தநால், அங்கு சிகிச்சை அளிக்கமுடியாமால், பீகார் மாநிலம் கயாவில் உள்ள அனுக்ரா நாராயண் மகத் மருத்துவக் கல்லூரிக்கு அவர் அனுப்பப்பட்டார்.

இந்நிலையில், அங்கு அவர் தனது உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.

மலம் கழிக்கச் சென்ற அவரை, 3 பேர் சேர்ந்து தூக்கிச் சென்று, மாறி மாறி துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

தப்பிக்க முயன்ற அவரை கடுமையாக தாக்கி, நடந்ததை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி சித்தரவதை செய்துள்ளனர்.

பின்னர், அவரது பெண்ணுறுப்புக்குள் ஒரு ஸ்டீல் டம்ளரை நுழைத்து கடுமையாக சேதப்படுத்தி, மயக்க நிலையில் அவரை குட்டை ஓரமாக தூக்கி வீசிவிட்டு, இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக இரண்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மூன்றாவது நபர் இன்னும் தலைமறைவாகியுள்ளார். அவரை கைது செய்ய பொலிஸார் சோதனைகள் நடத்திவருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்