தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் புதிய வரவு! வியப்பூட்டும் சாந்தனிக் குட்டி

Report Print Vethu Vethu in சிறப்பு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் வரி குதிரை ஒன்று குட்டி ஈன்றுள்ளதாக மிருகக்காட்சி சாலை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மிருகக்காட்சியில் மிகவும் அரிதாக காணப்படும் விலங்கினத்தின் புதிய வரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வரி குதிரை குட்டி பிறந்த நொடிப்பொழுதில் எழுந்து நிற்க முயற்சித்த காட்சி அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மிகுந்த ஆரோக்கியத்துடன் காணப்படும் குறித்த குட்டி, தனது தாயுடன் நடை பழகுவதாக அதிகாரி கூறினார்.

புதிதாக பிறந்த வரிக் குதிரை குட்டிக்கு சாந்தனி எனவும், அதன் தாய்க்கு சரணி எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் தற்போது நான்கு பெண் வரி குதிரைகளும் இரு 2 ஆண் வரி குதிரைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்