ஐரோப்பாவிலுள்ள நான்காயிரம் பிள்ளைகளுக்கு இலங்கை விடுத்துள்ள வேண்டுகோள்!

Report Print Vethu Vethu in சிறப்பு

ஐரோப்பிய நாடுகளில் வாழும் நான்காயிரம் இலங்கையிலுள்ள பிள்ளைகளை தேடி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்து, டென்மார்க், சுவீடன் மற்றும் பிரித்தானிய ஆகிய நாடுகளில் உள்ள குறித்த பிள்ளைகளுக்கு பெற்றோரை கண்டுபிடிப்பதற்கு உதவுவதாக சுகாதார அமைச்சர் வெளிநாட்டு ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நெதர்லாந்து இலங்கை தூதுவர் Joanne Dornewaard மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு இடையில் சுகாதார அமைச்சில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சுகாதார அமைச்சர் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் நெதர்லாந்து தொலைகாட்சிக்கு வழங்கிய செவ்வி தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கை பிள்ளைகள் தங்கள் பெற்றோரை கண்டுபிடிப்பதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்துடன் தொடர்புப்பட்டு DNA பரிசோதனை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக முதலில் பிள்ளைகள் தொடர்பான தரவு பெற்றுக் கொண்டு பிரச்சாரம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதன் பின்னர் DNA பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய வெளிநாடுகளில் உள்ள இலங்கை பிள்ளைகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பபட்டுள்ளது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்