உலக சாதனையுடன் ஏவுகணை தயாரிப்பு முயற்சியில் இலங்கைத் தமிழ் இளைஞன்

Report Print Theesan in சிறப்பு

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவனும் இயந்திரவியல் பொறியியலாளருமான கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற இளைஞன் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மின்சார பொருளான பிளக் “பொய்ன்ற்” (நீள் மின் இணைப்பு பொருத்தி) தயாரிப்பில் உலகில் அதிக நீளமான 'மின் இணைப்பு பொருத்தி' (பிளக் பொய்ன்ற்) தயாரித்து சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிகழ்வானது வவுனியா தமிழ் மத்திய கல்லூரி மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் இன்று நடைபெற்றது.

அந்த வகையில் 2.914 மீற்றர் நீளமும், 0.074 மீற்றர் அகலமும், 0.050 மீற்றர் உயரமும் கொண்ட நீள் மின் இணைப்பு பொருத்தியை க. கணேஸ்வரன் தயாரித்து உலக சாதனைக்காக முயற்சித்துள்ளார்.

இந்த இளைஞனின் உலக சாதனை முயற்சியை நில அளவை திணைக்களத்தினை சேர்ந்த அரச நில அளவையாளர் பி.நிமலன் மற்றும் மின் பொறியிலாளர் கெ.ராஜ்குமார் ஆகியோர் பார்வையிட்டு பரிசோதித்ததுடன் க.கணேஸ்வரனின் உலக சாதனை முயற்சி சம்பந்தமான அறிக்கையை கின்னஸ் சாதனை சான்றிதழுக்காக அனுப்பி வைக்கவுள்ளனர்.

அத்துடன் இயந்திரவியல் பொறியியலாளரான க.கணேஸ்வரன் ஏவுகணை தயாரிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமையும், சிறியளவிலான ஏவுகணைகளை தயாரித்து உள்ளார்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...