அபூர்வமான தாவர செடி! உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்த இலங்கையர்

Report Print Vethu Vethu in சிறப்பு

அபூர்வமான தாவரம் ஒன்றை வளர்த்த இலங்கையர் தொடர்பில் சர்வதேச ரீதியாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கெக்டஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கற்றாழை வகை செடி ஒன்றை பெருமளவு வளர்த்த இலங்கையர் உலக அளவில் புகழ் பெற்றுள்ளார்.

கெக்டஸ் என்ற செடி பெரிய அளவு உயரமாக வளராத ஒன்றாகும். அத்துடன் கற்றாழையின் முக்கியத்துவம் அறியாத பலர் அதனை வளர்ப்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை.

இந்நிலையில் கெக்டஸ் வளர்க்கும் இலங்கையர் தொடர்பில் உலக புகழ்பெற்ற செய்தி சேவை ஒன்று கவனம் செலுத்தியுள்ளது.

நிமல் ராமசந்திர என அழைக்கப்படும் குறித்த இலங்கையர் முன்னாள் விமான கட்டுப்பாளராக செயற்பட்டுள்ளார்.

அவரது வயது 80ஆகும். தற்போது அவரிடம் 2000 அதிமான கற்றாழை செடிகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவற்றில் பல வருடங்கள் பழைமையான ஒன்றாகும் என குறிப்பிடப்படுகின்றது.

உலகின் அவதானம் செலுத்தப்பட்ட குறித்த இலங்கையர் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று காணொளியை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...