முதன்முறையாக இலங்கைச் சிறுவர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு

Report Print Shalini in சிறப்பு

உலகளாவிய ரீதியில் நடாத்தப்படும் உதைப்பந்தாட்ட நட்புறவு சமூகத்திட்டத்திற்கு இலங்கையிலிருந்து இரு சிறுவர்கள் தெரிவாகியுள்ளனர்.

டினுக பண்டார மற்றும் அயான் சதாத் ஆகிய 12 வயது உதைப்பந்தாட்ட ஆர்வலர்களே தெரிவாகி உள்ளனர்.

ரஷ்யா - மொஸ்கோவில் ஜுன் மாதம் நடைபெறவுள்ள உலக இளம் உதைப்பந்தாட்டாளர்களின் நிகழ்வில் டினுக்க பண்டார கலந்துகொள்ளவுள்ளார்.

அயான் சதாத் இளம் செய்தியாளராகவும் உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் நடத்தப்படும் போட்டிகள் தொடர்பிலான சர்வதேச சிறுவர் ஊடக மத்திய நிலையத்தில் இணைந்து செயற்படவுள்ளார்.

இவர் இந்த திட்டத்திலான விடயங்களை தெளிவுபடுத்தவுள்ளார்.

இதன்போது இவர்களுக்கு பல்வேறு நாடுகளைசேர்ந்தவர்களுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.

இளைஞர்கள் மத்தியில் உதைப்பந்தாட்ட விளையாட்டை மேம்படுத்துவதும், ஆராக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

வருடந்தோறும் நடத்தப்பட்டுவரும் இந்த நட்புறவு திட்டதில் 211 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த திட்டத்தில் இலங்கையின் சார்பில் முதன்முறையாக டினுக பண்டார மற்றும் அயான் சதாத் கலந்துகொள்கின்றனர்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers