இலங்கைச் சிறுவர்களுக்காக பிரித்தானிய சிறுவர்கள் செய்யும் செயல்

Report Print Ajith Ajith in சிறப்பு
245Shares
245Shares
ibctamil.com

பிரித்தானியாவைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் சிறுவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரித்தானிய மென்சஸ்டர் பகுதியில் வசிக்கும் 6 மற்றும் 4 வயதான இரண்டு சிறுவர்கள் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள இலங்கை உட்பட்ட பல நாடுகளின் சிறுவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை விஸ்தரிப்பதாக மென்சஸ்டர் ஈவினிங் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஜேசன் கோப் மற்றும் எல்.பீ லியோன் என்ற இந்த இரண்டு சிறுவர்களுமே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

அவர்கள் வாசிப்பு பழக்கத்தை பொழுதுபோக்காக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சிறுவர்கள் இருவரும் தமது நண்பர்களுடன் இணைந்து சேகரித்த 1661 நூல்களை இலங்கை, மொங்கோலியா, மற்றும் கம்போடியா போன்ற நாடுகளுக்கு அனுப்பியுள்ளனர்.

சிறு வயதிலேயே இந்த சிறுவர்களின் நற்பணிகளுக்கு அவர்களின் பெற்றோரும் பாடசாலை நிர்வாகமும் உதவியளித்து வருகின்றனர்.

இலங்கை, கம்போடியா மற்றும் மொங்கோலியா முதலான நாடுகளில் உள்ள 23 கற்றல் நிலையங்களுக்கு இந்த புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படுவதாக மென்சஸ்டர் ஈவினிங் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்