வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்காக அரசாங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

Report Print Vethu Vethu in சிறப்பு

இலங்கையிலுள்ள முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் வெளிநாடுகளில் பணி புரியும் ஊழியர்களுக்கும் விசேட கடன் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் விசேட கடன் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க நிதி முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது விடயம் தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கான யோசனை ஒன்றை அண்மையில் அமைச்சரவைக்கு சமர்ப்பித்தார்.

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சிறிய வகை மோட்டார் வண்டிகளை கொள்வனவு செய்வதற்கான உயர்ந்தபட்ச கடன் தொகையாக 20 இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு நிதி முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதேவேளை வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கை பணியாளர்களுக்கு 10 மில்லியன் ரூபாய் வரையான வீட்டுக்கடன் வழங்குவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

வெளிநாட்டில் பணியாற்றுகின்றவர்களுக்கான கடன் 15 வருடங்களில் செலுத்த முடியும் என்பதுடன், அவர்களுக்கு இரண்டு வருட நிவாரண காலமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான பதிவினை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் மேற்கொண்டு, உள்நாட்டு வங்கியொன்றில் நிதி வைப்புச் செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்