சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் வவுனியா மாணவர்கள் சாதனை!

Report Print Thileepan Thileepan in சிறப்பு

வியட்நாமில் நடைபெற்ற சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையில் வவுனியாவைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சை வியட்நாமில் நடைபெற்றது. இதில் 24 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இப் பரீட்சையில் இலங்கையின் சார்பில் கலந்து கொண்ட அணியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் மயூரன் யதுர்சன் வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கி கொண்டார்.

அதே அணியில் கலந்து கொண்ட வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி எஸ்.சப்தகி மேற்படி போட்டியில் வெண்கல பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.

இதன்மூலம் இவ்விரு மாணவர்களும் சர்வதேச ரீதியில் சாதனை படைத்து இலங்கைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்