யார் இந்த பாப் டிலான்? நோபல் பரிசு நாயகனின் சாதனை பயணம்

Report Print Maru Maru in சிறப்பு

பிரபல பொப் இசை பாடகரான பாப் டிலானின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பாப் இசையின் சின்னமாக அவர் விளங்குகிறார், சமகால இசைக் கலைஞர்களிடம் முற்றிலும் மாறுபட்டவர், தனக்கு ஒப்புமை இல்லாதவர்.

இதுவரையில் அமெரிக்காவில் உருவான இசைக் கலைஞர்களில் இவருக்கு மக்கள் மனதில் அளிக்கப்பட்டிருக்கும் இடம் யாருக்கும் இல்லை.

பொப் இசை பாடலை டிலானே எழுதுகிறார். அவருடைய சிந்தனைகளும் இசையோடு பாடும் குரல் மற்றும் பாவனை அனைத்திலும் திகழும் அமெரிக்க பாரம்பரிய வளமும் சேர்ந்து மக்களை ஈர்க்கிறது.

பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை, வடதுருவத்திலிருந்து தென்துருவம் வரை பொப் டிலானை அறியாதவர்கள் இருக்க முடியாது. ஒரு நாட்டில் சாதாரண குக்கிராமத்தில் வாழ்பவரை கேட்டால் கூட அறிந்திருப்பார், அவ்வளவு பிரபலமானவர்.

ஆனாலும், உலகம் முழுதும் அறியப்படுவது மட்டும் திறமைசாலிகளுக்கு அளவுகோல் அல்ல. இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒருநாள் நடக்கும் ஒரு பகிரங்கமான சம்பவத்தால் கூட உலகம் முழுதும் அறியப்படுகிறார்கள்.

ஆனால், டிலான் பாடும் மேடைகள் உலகம் முழுதும் வீடுகளில் உள்ள தொலைக்காட்சி திரைகளில் ஒளிர்கிறது. இவர் எல்லொருக்கும் நட்சத்திரமாக இருப்பதற்கு இதைவிட சாட்சியம் என்ன வேண்டும்.

ஆனால், இவ்வளவு பெரிய வளர்ச்சியை அவர் எளிதாக எட்டிவிடவில்லை. 1961 லிருந்து 2016 வரை ஒரு கடின பயணம் அவருடைய வரலாறு. பொப் பாடகராக தெரிந்த பலருக்கு அவரால் ஏற்பட்ட கலகங்கள் தெரியாது.

பாப் டிலான் வாழ்க்கை

1941 மே மாதம், ராபர்ட் ஆலன் ஸிம்மர்மேனுக்கும் ஒரு லிதுவேனியருக்கும் பிறந்தார்.

இவர் பிறக்கும் போது, அவர்கள் ரஷ்யாவில் குடியேறி இருந்தனர். தங்கள் குழந்தை பிற்காலத்தில் ஒரு காவியமாக விளங்கும் என்பதை கனவிலும் நினைத்ததில்லை. ரஷ்ய குடியேறிகளுக்கு பிறந்து, இவர் அமெரிக்க வரலாற்றையே எழுதுவார் என்று கணிக்கவில்லை. ஆனால், அது நடந்தது.

டிலான் பருவவயதில், 1961 ல் நியூயார்க் வந்து அங்குள்ள ’கபே வா’ வில் பாடினார்.

அவரைப் பாராட்டிய முதல் விசிறி வூடி குத்ரீ பிறகு, அவர்களிடையே காதலும் மலர்ந்தது. அதன் பிறகே, அவர்களுடைய பாடல்களில் ஜீவன் இருந்தது.

டிலான் கொலம்பியா பதிவு நிறுவனத்தில்தான் தனது ஒப்பந்தத்திற்கான முதல் கையெழுத்தை போட்டார்.

அதற்கு முன்பே அவர் தனது பெயரை டிலான் என மாற்றிக்கொண்டிருந்தாலும் அப்போது ராபர்ட் ஆலன் ஸிம்மர்மேன் என்றே கையெழுத்திட்டார்.

வெல்ஸ் கவிஞரான டிலான் தாமஸின் மீதுள்ள ஆர்வத்தால் தனது பெயரையும் டிலான் என மாற்றிக்கொண்டார். டிலான் இசை, பாடகர் என்பதை கடந்து சிறந்த எழுத்தாளர் என்பதுதான் ஆச்சரியம்.

“காற்றின் சலனம்” (Blown in the wind) என்ற முதல் இசை ஆல்பம்தான் அவருடைய புகழை ஈட்டித்தந்தது.

1963 ல் மார்ட்டின் லூதர்கிங் ஜூனியர் நிகழ்த்திய ’என்னுடைய கனவு’ (’I have a Dream’) என்று தனது வரலாற்றை பேசிய மேடையில் டிலானும் இருந்தார்.

அங்கு வெளியான அவரது இரண்டாவது ஆல்பமான ‘ப்ரீவீலின் பாப் டிலான்’ பெரிய வெற்றி பெற்றது.

1964 ல் வெளியான ”தி டைம்ஸ் தே ஆர் சேஞ்சின்” என்ற மூன்றாவது ஆல்பம் அவரை ஒரு எதிர்ப்பு பாடகராக அடையாளப்படுத்தியது.

அவர் 1965 ல் சாரா லோவ்ண்ட்ஸ் என்ற பெண்ணை திருமணம் செய்த நிகழ்வில் இரண்டுபேர் மட்டுமே கலந்துகொண்டனர்.

“ஜுடாஸ்” என்ற எலெக்ட்ரிக் கிதார் கருவியை இசைக்க பழக, பைக்கில் செல்லும்போது வுட்ஸ்டாக் அருகே விபத்து நடந்தது.

அவருடைய கடைசி குழந்தை ஜாகப் 1969 ல் பிறந்தது. அவர் தன் விருப்பப்படி இசையில் ஆர்வமாக உருவாகிவருகிறார்.

1971 ல் மாடிசன் சதுக்கத்தில், நடந்த அனைத்து நட்சத்திரங்களும் கலந்துகொண்ட வங்காள தேச அகதிகளுக்கான கச்சேரியில் டிலானும் வாசித்தார்.

டிலானின் வினோதமான நடவடிக்கைகளால், அவர் மனைவி அவரை விவாகரத்து செய்ய மனுத்தாக்கல் செய்தார்.

1978 ல் அவருடைய இசை சாதனைக்கு, இரண்டு ஆண்டுகள் கழித்து, முதல் கிராமி விருது கிடைத்தது.

அவர் 5 மணிநேரத்தில் 50 பாடல்களை பாடிய சாதனைக்குப் பிறகு, அவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான கிராமி விருது கிடைத்தது.

அடுத்த 15 ஆண்டுகளில் ஒரு ஆஸ்கார் விருதை வென்றார். ஜனாதிபதி பதக்கம் பெற்றார். இதே ஆண்டில் 12 வது கிராமி விருதையும் பெற்றார். இப்போது நோபல் பரிசும் அவரை தேடிவந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய விருதுகளான ஆஸ்கார் மற்றும் நோபல் பரிசு இரண்டையும் பெற்ற ஒரே சாதனையாளராக பெர்னாட்ஷா இருந்தார். இப்போது பாப் டிலனும் இடம்பெறுகிறார்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments