அபிவிருத்தி அனுமதி பத்திரமொன்றை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள்

Report Print Steephen Steephen in சிறப்பு

நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஒழுங்கு விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் அல்லாத பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான அனுமதிப் பத்திரத்திதை பெற்றுக்கொள்ளவதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், வடக்கு தவிர்ந்த 8 மாகாணங்களில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஒழுங்கு விதிகளுக்குள் வராத பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

1986 ஆம் ஆண்டு 10 மாதம் 3 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1986 ஆம் ஆண்டின் 392-9 ஆம் இலக்க வர்த்தகமானி அறிவித்தலுக்கு அமைய விண்ணப்பிக்கும் நபர், காணியின் சொத்தின் உரிமை அல்லது திட்டமிடல் மற்றும் கட்டட ஒழுங்கு விதிகளுக்கு அமைய தகைமையுடயவராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் சகல மாகாண அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வார நாட்களில் காலை 8.30 முதல் மாலை 4.15 வரையில் செலுத்தலாம்.

உறுதிசெய்யத் தேவையான ஆவணங்கள்
  • காணியின் நிலஅளவை வரைப்படம்
  • காணி உறுதி
  • காணியில் நுழைவதற்கான வீதியின் மாதிரி வரைபடம்

கடமைக்கு பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments