சமையல் கலையில் புகுந்து விளையாடும் 6 வயது சிறுவன்! வைரலாகும் ஆச்சரிய வீடியோ

Report Print Raju Raju in சிறப்பு
1366Shares
1366Shares
lankasrimarket.com

சாப்பிடுவது என்பது எந்த வயதிலிருந்தும் தொடங்கலாம். ஆனால் விதவிதமாகவும், சுவையாகவும் சமைக்க குறிப்பிட்ட வயதாக வேண்டும் அல்லவா?

அதை ஒரு சிறுவன் முறியடித்துள்ளான்.

நிஹல் ராஜன் (6) என்ற கேரளா மாநிலத்தின் கொச்சியில் வாழும் சிறுவன் தான் இளவயது சமையல் நிபுணராக திகழ்ந்து வருகிறான். ராஜனுக்கு கிச்சா என்ற செல்ல பெயரும் உண்டு.

தந்தை ராஜகோபால், தாய் ரூபியுடன் கிச்சா வசிக்கிறான்.

கிச்சாவுக்கு மூன்றரை வயது இருக்கும் போதே கூகுள் தேடலில் ஆர்வம் வந்துள்ளது. அப்போதே சமையல் சம்மந்தமாக அவனுக்கு நாட்டம் இருந்துள்ளது.

பின்னர் தன் தாய் ரூபி சமையலறையில் கேக் தயாரிக்கும் போது அதை கிச்சா ஆர்வமாக பார்த்துள்ளான். பின்னர் அதை செய்யும் முறையை அவரிடமே கூறி ஆச்சரியப்படுத்தினார்.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சமையல் டிஷ்களை கற்று தேர்ந்தான். கிச்சாவின் தந்தை விளம்பர தொழிலில் இருப்பதால் அவருக்கு தனி யூ.டீயூப் சேனல் உள்ளது.

அது போலவே தனக்கும் ஒரு சேனலை உருவாக்க தந்தையிடம் கிச்சா கேட்க அவர் அதை செய்து கொடுத்தார்.

ஓட்மீல் குக்கீஸ், ஐஸ்க்ரீம் கேக்ஸ், தேங்காய் பாயசம், ரெயின்போ இட்லி போன்ற உணவுகளை தயார் செய்த கிச்சா அதை பற்றி விரிவாகி வழங்கி தன் யூ.டீய்ப் சேனலில் பதிவேற்றியுள்ளான்.

தற்போது அவன் சேனலுக்கு 14000க்கும் மேற்ப்பட்ட சந்தாதாரர்கள் உள்ளனர். பல விதமான உணவுகள் செய்து அதை அதில் கிச்சா வெளியிடுகிறான்.

எல்லாவற்றுக்கு உச்சமாக The Ellen DeGeneres Show என்னும் புகழ்பெற்ற அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு கிச்சாவை அழைத்தது அவரின் பெரிய மைல்கல்லாகும்.

தற்போது ஒன்றாம் வகுப்பு படிக்கும் கிச்சாவின் யூ.டியூப் சேனலின் பெயர் ‘குக் வித் கிச்சா’ என்பதாகும்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments