விசில் அடித்தால் பறந்து வரும் காகங்கள்! மனதை நெகிழ வைக்கும் சம்பவம்

Report Print Gokulan Gokulan in சிறப்பு
227Shares
227Shares
Promotion

இன்றைய காலகட்டத்தில் பிச்சைக்காரர்களை பார்த்தாலே ஏளனமாய் பார்த்து விட்டு செல்பவர்கள் ஏராளம்.

நெருக்கடியான அவசர காலங்களில் கூட மனிதர்களுக்கு உதவ மறுக்கிறார்கள், இந்நிலையில் காகங்களுக்கு தினமும் நபர் ஒருவர் உணவளித்து வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம் சென்னை திருவான்மியூர் கடற்கரையில் தினமும் காலை விஷ்ணு பிரசாத் என்பவர் காகங்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.

இவர் விசில் அடித்ததும் பறந்து வரும் காகங்களுக்கு பிஸ்கெட்டுகள், காராபூந்தி வழங்குகிறார்.

இதுகுறித்து விஷ்ணுபிரசாத் கூறுகையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சண்முகம் என்ற பெரியவர் தினமும் காகங்களுக்கு உணவளித்து வந்தார்.

அவரிடம் நண்பராக பழகினேன், ஒருநாள் அவரை கடற்கரைக்கு அருகே உள்ள பூங்காவில் பார்த்தேன்.

இன்று காகங்களுக்கு உணவளிக்க செல்லவில்லையா என்று கேட்டேன். அதற்கு அவர், என்னால் தினமும் நடந்து சென்று உணவளிக்க முடியவில்லை, நீங்கள் சென்று உணவளியுங்கள் என்று கூறினார்.

இதனால் 2 நாட்கள் நான் தொடர்ந்து உணவளித்தேன். அதன் பிறகு அவரை நான் பார்க்கவில்லை, அவர் இறந்துவிட்டார் என்று பின்பு தெரிந்தது.

அவர் விட்டுசென்ற பணியை தொடர்ந்து செய்து வருகிறேன், காகங்களுக்கு இருக்கும் கட்டுப்பாட்டை அவை வரிசையாக அமர்ந்து, சண்டை போடாமல் சாப்பிட்டு நமக்கு உணர்த்துகின்றன என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்