உலகில் இன்றுவரை தொடரும் மர்மங்கள்

Report Print Deepthi Deepthi in சிறப்பு
475Shares

உலகில் நடக்கும் சில விடயங்கள் நமக்கு புரியாத புதிராக இருந்தாலும், அந்த புதிருக்கான விடையை தேடி இன்று வரை சென்றுகொண்டிருக்கிறோம்.

இன்று வரை மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் இருக்கும் சில புதிர்கள் இதோ,

Strange Lights

வித்தியாசமான விளக்குகள் வானில் பறப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம் என பல்வேறு நாட்டு மக்கள் சொல்ல கேட்டிருப்போம். ஏன், அவை அனைத்தும் புகைப்படங்களாக கூட வெளியாகி ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கீழே கொடுக்கப்பட்ட இந்த புகைப்படம் கடற்கரை ஓரத்தில் மக்கள் இளைப்பாறிக்கொண்டிருந்தபோது, இந்த விளக்குகள் வானில் பறந்தும் கடல் நீரிலும் மிதந்தடிபடி மறைந்து சென்றன.

White Lady

1975 ஆம் ஆண்டு Norfolk - இல் அமைந்துள்ள Worstead தேவாலயத்தில் Diane Berthelot என்ற பெண் அமர்ந்து மன்றாடிக்கொண்டிருக்கையில் அவருக்கு பின்னால் ஒரு வெள்ளை உருவம் இருந்தது புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.

அந்த வெள்ளை உருவம் ஒரு பெண் போல் தெரிகிறது. ஆனால் யார் எந்த வெள்ளை பெண்மணி என்பது குறித்து இன்றுவரை அறியவரவில்லை.

Elisa Lam

அமெரிக்கவில் 2013 ஆம் ஆண்டு இப்பெண் உயிரிழந்தார். ஆனால் எதற்காக இவர் உயிரிழந்தார் என்பது இதுவரை அறியப்படவில்லை.

இவரது உடல் ஒரு தண்ணீர் தொட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் உள்ள மர்மம் என்னவென்றால் இவர் இறந்தபின்னர் elevator க்குள் அடிக்கடி உள்ளே வந்து வெளியே செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

Freddy Jackson

விமான விபத்தின் போது Freddy Jackson உயிரிழந்துவிட்டார். இவர் இறந்து இரண்டு நாட்களுக்கு பின்னர் விமான ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த குழு புகைப்படத்தில் இவரது முகம் பதிவாகியுள்ளது.

விமான ஊழியர்கள் புகைப்படம் எடுக்கும்போது, இவரது இறுதிசடங்கு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Mary And The UFO

மிகவும் தத்ரூபமாக வரையப்பட்ட மாதாவின் இந்த படம் உலகம் முழுவதும் பிரபலமான ஒன்று. ஆனால் இந்த ஓவியத்தின் பின்னால் உள்ள பறக்கும் தட்டு எதற்காக? அது உண்மைதானா? என்பதற்கான அர்த்தம் தெரியவில்லை.

மாதாவின் புகைப்படத்திற்கு பின்னால் நின்றுகொண்டிருக்கும் நபருக்கு அருகில் நாய் ஒன்று நிற்கிறது. நாயுடன் நிற்கும் அந்த நபர் வானில் பறக்கும் மர்மதட்டை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆனால் இதற்காக விளக்கம் இதுவரை அறியப்படவில்லை.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்