இந்த கழிப்பறையின் விலை 100,000 டொலராம்: அப்படியென்ன சிறப்பு?

Report Print Raju Raju in சிறப்பு
153Shares
153Shares
ibctamil.com

தோல் பைகளால் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள கழிப்பறையின் விலை $100,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த Illma Gore என்ற பெண் ஓவியர் தான் இதை உருவாக்கியுள்ளார்.

உலக புகழ்பெற்ற Louis Vuitton நிறுவனத்தின் பைகளால் கழிப்பறை உருவாக்கப்பட்டுள்ளது, இதில் தங்க முலாமும் பூசப்பட்டுள்ளது.

$15,000 மதிப்புள்ள 24 தோல் பைகள் கழிப்பறை செய்ய உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

இதோடு $3,000 மதிப்புடைய சூட்கேஸ் பைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த கழிப்பறையை செய்து முடிக்க 3 மாத காலம் ஆகியுள்ளது.

இது குறித்து Illma Gore கூறுகையில், நான் உருவாக்கிய இந்த கழிப்பறையில் தனிப்பட்ட முறையில் உட்கார மாட்டேன், ஆனால் மக்கள் அதில் உட்காரலாம் என கூறியுள்ளார்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்