சசிகலாவுக்கு சொந்தமான இடத்தில் இதெல்லாம் இருக்கு தெரியுமா?

Report Print Kabilan in சிறப்பு

தமிழகத்திலேயே மன்னார்குடி என்றால் சட்டென நினைவுக்கு வருவது சசிகலா தான், சசிகலாவை போன்று மன்னார்குடியும் புகழ்பெற்று விளங்குகிறது.

கடந்த வாரத்தில் சசிகலா குடும்ப உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் பதட்டத்தில் இருக்கிறாராம் சசிகலா.

இந்நிலையில் அவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள புகழ்பெற்ற இடங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

உலகப் புகழ்பெற்ற கோவில்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் அமைந்துள்ளது ராசகோபாலசுவாமி கோயில்.

இந்த கோயிலின் வளாகம், சுமார் 23 ஏக்கர் பரப்பளவில், 24 சந்நிதிகள், 16 உயர்ந்த கோபுரங்கள், 7 முற்றங்கள், 7 கூடங்கள் மற்றும் 9 குளங்கள் எனக் கொண்ட பெரிய கோயில் என்பதால் இது உலகப்புகழ் பெற்ற கோயிலாக கருதப்படுகிறது.

மன்னார்குடியிலிருந்து அருகில் ஹரித்ரா நதி, முத்துப்பேட்டை, முடிகொண்டான் கோதண்ட ராமர் கோயில், தியாகராஜ சுவாமி கோயில், கூத்தனூர் சரஸ்வதி கோயில் என சிறப்பு வாய்ந்த இடங்களும் உள்ளன.

சென்னை மாநகரில், சசிகலா குடும்பத்துக்குச் சொந்தமான பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அதைச் சுற்றிலும் பல சுற்றுலா இடங்கள் உள்ளன

வேளச்சேரி பகுதியில் பீனிக்ஸ் மால் அமைந்துள்ளது, இதில் பல வர்த்தக நிறுவனங்கள், திரைப்பட அரங்குகள் மற்றும் பல கடைகளும் உள்ளன.

ஈக்காட்டுத்தாங்கலில் பல ஐடி நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்களும் உள்ளன. சுற்றுலாவுக்கு என பெரிய பகுதிகள் இல்லை என்றாலும், பொழுதுபோக்கு என சிறிய மால்கள், பூங்காக்கள் இங்கு அமைந்துள்ளன.

மேலும், ஈக்காட்டுத்தாங்கலைச் சுற்றிலும் காசி திரையரங்கம், தாமரை தொழில்நுட்ப பூங்கா, ஒலிம்பியா தொழில்நுட்ப பூங்கா என பல இடங்கள் அமைந்துள்ளன.

கத்திப்பாரா என்பது ஆசியாவிலேயே குறிப்பிடத்தக்க பாலங்களுள் ஒன்றாகும். இதன் வண்ணத்துப்பூச்சி போன்ற வடிவமே இதன் சிறப்பை குறிக்கிறது.

ஆன்மீகத் தலங்களாக கத்திப்பாராவிற்கு அருகில், வேம்புலியம்மன் கோயில், ஸ்ரீ லட்சுமி விநாயகர் கோயில், அம்பாள்நகர் மசூதி, ஸ்ரீ கங்கையம்மன் கோயில் மற்றும் ராமலிங்கேசுவரர் திருக்கோயில் ஆகிய கோயில்கள் அமைந்துள்ளன.

யுனெஸ்கோவினால் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம் தஞ்சாவூரில் உள்ளது. ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோயில், இந்நகரத்தின் கலாச்சார அடையாளமாக விளங்குகிறது.

சிறந்த நினைவுச் சின்னமாகப் போற்றப்படும் ‘மனோரா கோட்டை’, தஞ்சையில் இருந்து 65 கி.மீ தொலைவில் உள்ள பட்டுக்கோட்டையில் அமைந்துள்ளது.

எட்டு அடுக்குகளுடன் எண்முக வடிவில், 23 மீட்டர் உயர கோபுரம் கொண்ட இது பார்வையாளருக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் என்கிறார்கள்.

’ராயல் பேலஸ் மியூசியம்’ என அழைக்கப்படும் அருங்காட்சியம் ஒன்று தஞ்சாவூரில் அமைந்துள்ளது.

இங்கு, தஞ்சையை ஆட்சி செய்த மன்னர்களின் வரலாற்று நினைவுச்சின்னங்கள், ஓவியங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன.

மேலும், ராஜராஜ சோழனின் மணிமண்டபமும் தஞ்சையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது 1991ஆம் ஆண்டு, 8ஆம் உலகத் தமிழ் மாநாட்டின் போது அமைக்கப்பட்டது.

இந்தியாவின் புதிய முகமாக கூறப்படும் பெங்களூருவிலும், ஷாப்பிங் மால்கள், வானுயரக் கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் நிறைந்த சாலைகள் ஆகியவற்றினைக் கொண்டிருக்கிறது.

மேலும், ஜெயலலிதாவின் விருப்ப இடமான கோடநாடு, தற்போது சுற்றுலாப் பிரியர்கள் இடையே சமீபகாலமாக பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதன் அருகே உள்ள ஊட்டியிலும் அமைந்துள்ள பசுமையான ஊர் கூடலூர் ஆகும்.

இங்கும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் படையெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...