கோவிலுக்கு வந்து கடவுளை வணங்கும் காட்டுயானை: எங்கு தெரியுமா?

Report Print Printha in சிறப்பு

கோபால்சுவாமி எனும் மலையில் காட்டுயானை ஒன்று தினமும் கோவிலுக்கு சென்று அங்குள்ள கடவுளை வணங்கி பக்தர்களிடமும் சாதுவாக நடந்து கொள்ளும் வினோத சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கோபால்சுவாமி மலையில் அமைந்திருக்கும் வேணுகோபால் சாமி கோவில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த கோவிலுக்கு தினமும் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்டுயானை ஒன்று அந்த மலையின் கீழிருந்து படிகள் வழியாக ஏறி கோவிலின் பிரதான நுழைவு வாயில் மூலமாக கோவிலுக்குள் வந்தது.

அதன் பின் அது சன்னதிக்குள் சென்று அங்கு வீற்றிருக்கும் வேணுகோபால் சாமியை, தும்பிக்கையை உயர்த்தி வணங்கியது.

அந்த காட்டுயானையைப் பார்த்த பக்தர்களும், பூசாரிகளும் கோவிலில் இருந்து அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

ஆனால் அந்த காட்டுயானை யாரையும் தொந்தரவு செய்யாமல், கோவில் வளாகத்தின் ஓரம் கிடந்த வாழை இலைகள், உணவுகள், பிரசாதங்களை தின்றுவிட்டு அங்கிருந்து சென்று விட்டது.

அதேபோல் அந்த காட்டுயானை தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக மாலை நேரத்தில் தினமும் கோவிலுக்கு வந்து செல்கிறது.

இந்த வினோத நிகழ்ச்சியை நேரில் பார்க்க தற்போது இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள் என்று அந்த கோவில் பூசாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers