நம் தலையை சுற்ற வைக்கும் இயற்கையின் வினோதங்கள்

Report Print Kavitha in சிறப்பு

உலகில் மனிதனை மிஞ்சும் பல அதிசயங்களும் கோடிக்கணக்கான அற்புதங்களும் நிரம்பிக் கிடக்கின்றன.

இந்த வரிசையில் நமது கற்பனைக்கும் எட்டாத உலகின் பல்வேறு இடங்களிலும் எண்ணற்ற அதிசயங்களின் தொகுப்பை நாம் பார்ப்போம்.

தலைகீழ் நீர்வீழ்ச்சி

ஹானலூனாவில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சி மேலிருந்து தண்ணீர் கீழ்நோக்கிப் பாயாமல் புவியீர்ப்பு விசையையும் தாண்டி, கீழிருந்து மேல்நோக்கிப் பாய்கிறது. இது மஹாராஷ்டிரா மாநிலத்தில் காணப்படுகின்றது.

கரையான் புற்று

உலகின் மிகப்பெரிய கரையான் புற்றுகள் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, ஆப்பிரிக்காவில் உள்ள சில கரையான் புற்றுகள் 30 அடி உயரத்துக்குக்கூட இருக்கின்றன.

வெயிலில் ஐஸ்வாட்டர் குளிரில் ஹாட் வாட்டர்

இத்தாலி நாட்டில் உள்ள ஆர்மினியா என்னும் அருவி ஒன்றில் மார்ச் மாதத்தில் நல்ல குடைகாலத்தில் ஜில்லென்று ஐஸ் கட்டிபோல தண்ணீர் கொட்டுமாம். அதே அருவியில் நவம்பர்,டிசம்பர் மாதங்களில் குளிருக்கு இதமாக வெதுவெதுப்பான நீர் வருமாம்.

எதிர்திசையில் பாயும் நதி

உலகில் உள்ள எல்லா நதிகளும் நிலநடுக்கோட்டை நோக்கித்தான் பாய்கிறது. ஆனால் நைல் நதி மட்டும்தான் நிலநடுக்கோட்டுக்கு எதிராகப் பாய்கிறது.

ஆண்டுக்கு 100 நாள்

உலகின் வட துருவப்பகுதிகளில் வருடத்தின் 365 நாட்களில் மூன்றில் ஒரு பங்கு நாட்களில் சூரிய உதயமே இருக்காதாம். கிட்டதட்ட ஒரு ஆண்டுக்கு 106 நாட்கள் இருளில் மூழ்கிக் கிடக்குமாம்.

7 ஏக்கர் ஆலமரம்

ஆந்திர மாநிலத்தில் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பகுதியில் ஒரு மிகப்பெரிய ராட்சச ஆலமரம் இருக்கிறது. இந்த மரத்துக்கு திம்மம்மா மாரிமானு என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது.

இந்த ஒரு மரம் மட்டும் கிட்டதட்ட 7 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய ஆலமரங்களில் இதுவும் ஒன்றெனக் கூறப்படுகிறது.

24 மணிநேரத்தில் 16 முறை சூரிய உதயம்

விண்வெளிக்குச் செல்லும் விஞ்ஞானிகள் ஒரு 24 மணி நேரத்தில் 16 முறை சூரிய உதயத்தையும் 16 முறை சூரிய அஸ்தமனத்தையும் பார்க்க முடியுமாம்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...