அழிவின் விளிம்பில் தமிழனின் பாரம்பரியம் “புலியாட்டம்”

Report Print Gokulan Gokulan in சிறப்பு

அழிந்து வரும் தமிழரின் பெருமைக்கு பறைசாற்றும் கலைகளில் ஒன்று தான் புலியாட்டம்.

தற்போது அழிந்து வரும் கிராமிய கலைகளில் கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், உறியடி ஆட்டம், சிலம்பாட்டம், புலியாட்டம் போன்றவை முக்கிய இடம்பெறுகின்றது.

தொன்று தொட்டு புலியாட்டம் என்பது வீரத்திற்கு அடிப்படையாகவும் தமிழனின் பாரம்பரியத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆடப்படும் ஆடங்களில் ஒன்றாகும். ஆனால் இன்று அது அழிவின் விளிம்பில் தான் இருக்கின்றது என்று சொல்ல முடியும்.

புலியாட்டம் என்பது புலி போன்று வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் புலி ஆட்டம் ஆகும். வரிப் புலி போல் மஞ்சள், கறுப்பு, இளஞ்சிகப்பு வண்ண பூச்சுக்களால் உடலைப் பூசி புலிமுகமுடைய முகம்மூடி, புலிக்காது, புலிவால், புலி நகங்கள் ஆகியவை அணிவர். காலில் சலங்கையும் கட்டுவர்.

இந்த ஆட்டம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம், கேரளா போன்ற பிற மாநிலங்களிலும் ஆடப்படுகிறது.

வீரத்தின் அடிப்படையாக ஆடப்படும் இந்த புலியாட்டம் பற்றிய சிறுதொகுப்பை இந்த காணொளி மூலம் பார்ப்போம்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்