உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் மரணம்

Report Print Kabilan in சிறப்பு

கென்யாவில் உலகின் கடைசி வெள்ளை இன ஆண் காண்டாமிருகமான ‘சூடான்’, வயது முதிர்ச்சியின் காரணமாக உயிரிழந்துள்ளது.

உலகில் சுமத்ரா, ஜாவா, கருப்பு மற்றும் வெள்ளை, இந்திய காண்டாமிருகம் என ஐந்து காண்டாமிருக இனங்கள் உள்ளன.

இந்த காண்டாமிருகங்கள் பொதுவாகவே வயதின் முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகவே உயிரிழக்கும்.

ஆனால், ஆப்பிரிக்காவில் அதிகரித்து வரும் வேட்டையின் காரணமாக காண்டாமிருகங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

உலகில் தற்போது, வெள்ளை காண்டாமிருகங்கள் மூன்று மட்டுமே உள்ளது. அவற்றில் ஒரே ஆண் காண்டாமிருகமான ‘சூடான்’, கென்யாவின் ஒல் பெஜெட்டா எனும் விலங்குகள் காப்பகத்தில் பலத்த பாதுகாப்பில் பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகமான ‘சூடான்’, வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒல் பெஜெட்டா விலங்குகள் காப்பகம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘45 வயதாகும் சூடானால் எழுந்து நிற்ககூட முடியவில்லை. மிகவும் நோய்வாய்ப்பட்டு பலவீனமாக காணப்பட்டது. அதன் சதைகள், எலும்புகள் சிதைந்தது.

அதனுடைய தோல் பகுதியில் பெரும் காயங்கள் ஏற்பட்டது. அதன் காரணமாக சூடான் மரணமடைந்தது. எதிர்காலத்தில் செயற்கை முறையில் பெண் காண்டாமிருகம் மூலமாக இனப்பெருக்கத்தை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

STR/AP

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்