புகையை உமிழும் யானை! வைரலாகும் வீடியோ

Report Print Athavan in சிறப்பு

யானை ஒன்று புகையை உமிழ்வது போன்ற விசித்திர வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

கர்நாடகா வனப்பகுதியில் உள்ள நாகர்ஹோல் காட்டில் அதிகாலை வேளையில் குறித்த வீடியோ எடுக்கப்பட்டதாக வீடியோவை எடுத்த வினய் குமார் கூறியுள்ளார்.

ஒருநாள் காட்டில் புலிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க சென்ற போது, பெண் யானை ஒன்று மரத்துக்குக் கீழ் நின்று புகையை உமிழ்ந்துகொண்டிருந்ததைப் பார்க்க அதிர்ச்சியாக இருந்தது.

ஒரு மரத்துக்கு அருகே இருந்த தீப்பிடித்து எரிந்து சிதறிக்கிடந்த கரி (Charcoal) துண்டுகளை யானை தன் தும்பிக்கையால் எடுத்து உட்கொண்டு, புகையை உமிழ்ந்து கொண்டிருந்தது.

எதற்காக அப்படிச் செய்தது என்பது புரியாத புதிராகவே உள்ளது. அந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு, யானை புகைபிடிப்பது போன்று இருந்தது.

விசித்திரமான காட்சியாக இருந்ததால் இதை இணையத்தில் பகிர்ந்தேன், இந்த வீடியோ விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்கிறார் வினய் குமார்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers