துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல் கூராய்வில் தடயங்களை மறைக்க முடியுமா?

Report Print Trinity in சிறப்பு

ஸ்டெர்லைட் கம்பெனிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் பலியாகியுள்ள நிலையில் உடற்கூறாய்வு முடிவுகள் வரும்வரை அவர்களது உடலை பதப்படுத்தி வைக்குமாறு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் உடற்கூராய்வில் துப்பாக்கியால் சுடப்பட்ட தடயங்களை மறைக்க முடியுமா என்கிற கேள்விக்கு எஸ் ஆர் எம் குழுமத்தை சேர்ந்த தடயவியல் பேராசியர் ஒருவர் கூறியிருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

தனிப்பட்ட உடல் கூறாய்வு

உடல் கூறாய்வு என்பது அனைவருக்கும் பொதுவானது என்றாலும் துப்பாக்கி சூட்டால் பலியானவர்களுக்கென்றே தனிப்பட்ட உடற்கூறாய்வு நிபுணர்கள் இருக்கிறார்கள்.

துப்பாக்கி குண்டுகளால் மரணம் ஏற்பட்டால் அதனை ஆராய தடயவியல் அறிவியல் படி பாலிஸ்டிக்ஸ் என்ற தனி துறை (Firearms Examination and Ballistics Unit )இருக்கிறது.

துப்பாக்கி குண்டால் மரணித்தவரின் உடலில் முக்கியமாக இரண்டு காயங்கள் இருக்கும். ஒன்று துப்பாக்கி குண்டு உள் நுழைந்த உடலின் பாகம். இரண்டு அந்த குண்டு வெளியே சென்ற உடலின் பாகம். இதனைதான் entry/exit பாயிண்ட் என்கிறார்கள்.

இதனை முறையாக கூராய்வு செய்து, இதன் தடயங்களை புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டியது அவசியம். இதன் காரணமாகதான் துப்பாக்கி குண்டு மரணங்களில் உடல் கூராய்வு அறிக்கை வர பல நாட்கள் எடுக்கிறது.

அதுமட்டும் இல்லாமல் , துப்பாக்கிதாரி அருகிலிருந்து சுட்டு இருந்தால், உடலில் துப்பாக்கி ரவை, துப்பாக்கி புகை துப்பாக்கி துகள் போன்றவை இருக்கும். கொஞ்சம் தூரத்திலிருந்து சுட்டு இருந்தால் துப்பாக்கி புகை மட்டும் இருக்கும். சிறிது தொலைவிருந்து சுட்டு இருந்தால் துப்பாக்கி குண்டு மட்டும் இருக்கும் இப்படி இதன் அடையாளங்களை வைத்து நடந்த மரணத்திற்கான காரணங்களை கண்டுபிடிக்க முடியும்.

தடயங்களை அழிக்க முடியுமா?

துப்பாக்கி குண்டால் உயிரிழந்தவர்களின் உடல் கூராய்வு செய்யப்படும்போது போது தடயங்களை மறைக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, தடயங்களை மறைக்க முடியும். என்ற பதில் அதிர்ச்சியடைய செய்தது. மேலும் சில சிக்கலான வழக்குகளின் போது அரசியல் அழுத்தங்கள் ஏற்படுகின்றன என்றும் இவர் கூறியிருக்கிறார்.

மேலும் துப்பாக்கியால் ஏற்பட்ட காயங்களை, ஈட்டியால் ஏற்பட்ட காயங்கள் என்று மாற்றியும் அறிக்கை தர முடியும்" என்கிறார்.

துப்பாக்கி குண்டுகளில் entry/ exit பாயிண்ட்டில் ஏற்படும் காயங்களை ஈட்டி குத்தியதால் ஏற்பட்ட காயம் என்றுகூட அறிக்கையை மாற்றி தர முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் தங்கராஜ்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிமை

இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கென்று பல உரிமைகள் உள்ளன என்று கூறுகிறார் தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஜெ. அமலோற்பவநாதன்.

உடல் கூராய்வில் ஏதேனும் முறைகேடு செய்வார்கள் என்ற சந்தேகம் இருக்கும் போது , பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு உடல் கூராய்வை கண்காணிக்கும் மருத்துவரை தாங்களே நியமித்துக் கொள்ள முடியும். மேலும் ஒட்டு மொத்த கூராய்வையும் வீடியோவும் எடுக்கலாம் என அமலோற்பவநாதன் கூறுகிறார்.

மனித உரிமை மீறல்

துப்பாக்கி குண்டுகள் உடலில் பாய்ந்த இடங்கள் வைத்து மனித உரிமை மீறப்பட்டுள்ளதா என்று கண்டறிய முடியும் என்பதால் இது குறித்த முடிவுகள் வெகு சுலபமாக எடுக்க முடியும். பாதிக்கப்பட்டவரின் நெஞ்சு அல்லது தலை ஆகிய இடங்களில் குண்டு பாய்ந்திருந்தால் அது நிச்சயமாக மனித உரிமை மீறல்தான் என்கிறார் அமலோற்பவநாதன்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...