புராதன காலத்துக்குரிய பிரபஞ்சத்தின் புகைப்படத்தை வெளியிட்ட HUBBLE

Report Print Givitharan Givitharan in சிறப்பு

Hubble Space Telescope ஆனது அண்டைவெளிகளின் கண்கவர் புகைப்படங்களைப் படம்பிடிப்பதில் பேர்போன ஒன்று. தற்போது இது இன்னுமொரு புகைப்படத்தை படம்பிடித்து வெளியிட்டுள்ளது.

இப் பெரிய தொலைதூர பிரபஞ்சமானது கிட்டத்தட்ட 15 000 நட்சத்திர திரள்களைக் கொண்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

நாம் நம்சத்திரத் தொகுதியை பார்த்தோமானால், அவை நம்பமுடியாத அளவு தூரத்திலுள்ளன. அவை காலும் ஒளியானது புவியை வந்தடைய மில்லியன் அல்லது பில்லியன் வருடங்கள் எடுக்கின்றது. இதன் கருத்து நாம் காலத்தில் பின்நோக்கி பார்க்கின்றோம்.

தற்போதைய ஆழ்புல படமானது கிட்டத்தட்ட 11 பில்லியன் வருடங்களுக்கு மேலாக பின்னோக்கிப் பார்க்க வைக்கின்றது.

இது மூச்சு வாங்கும் விடயமாக இருப்பதுடன், ஆய்வாளர்கள் நட்சத்திரங்களின் தோன்றல் மற்றும் பரபஞ்சங்களின் வளர்ச்சி பற்றி விளங்கிக்கொள்ள இக் கண்டுபிடிப்பு மிக உதவியாகவுமிருக்கும்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்