காதலின் குறியீடுகள் எப்படி வந்தது தெரியுமா? சுவாரஸ்ய தகவல்

Report Print Kavitha in சிறப்பு

உலக காதலர் வாரம் பெப்ரவரி 7-ம் திகதி தொடங்கி 14 ஆம் திகதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

காதலர் தினத்துக்கு பல்வேறு வரலாறுகள் கூறப்பட்டாலும், கி.பி. 3-ம் நூற்றாண்டில் ரோமப் பேரரசன் இரண்டாம் கிளாடியஸ் காலத்து வரலாறு தான் பிரதானம்.

ரோம பேரரசில் காலத்தில் காதலித்து திருமணம் செய்யத்தடை இருந்த போது அதை எதிர்த்து வேலண்டைன் என்னும் பாதிரியார் காதலை ஆதரித்து பல இளைஞர்களுக்குக் காதல் திருமணம் செய்து வைத்தார்.

அதனால் பெப்ரவரி 14 கி.பி 270-ல் அவர் தூக்கிலிடப்பட்டார். அவர் இறந்த நாளை வேலண்டைன் தினமாகக் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

காதலன் அல்லது காதலிக்கு பரிசு வாங்கவும், காதலை வெளிப்படுத்தவும் ஏற்ற தருணமாக இளைஞர்கள் இதனைக் கருதுகின்றனர்.

காதல் என்றவுடன் நம் நினைவுக்கு வரும் ரோஜா, ஹார்ட், சாக்லெட், டெட்டி பியர் போன்றவை தான்.

இருப்பினும் இந்த காதலுக்கான குறியீடுகள் எப்படி வந்தது? அதனை காதலோடு ஏன் ஒப்பிடப்படுகிறது என்று அனைவருக்குமே தெரியாத புதிராக தான் இருந்து வந்தது.

அந்தவகையில் இந்த குறியீடுகள் எப்படி வந்தது என இங்கு பார்ப்போம்

ஹார்ட் சிம்பிள் வரக் காரணம் ?
Google

வட ஆப்ரிக்க கடற்கரைப் பகுதிகளில் வளரக் கூடிய 'சில்ஃபியம்' என்னும் செடியின் பூக்கள், விதைகள் ஹார்ட் ஷேப்பில் தான் இருக்குமாம்.

ஒருவேலை அதை வைத்துதான் ஹார்ட் காதலுடன் ஒப்பிடப்படுகிறதோ என்கிற பேச்சு இருக்கிறது. பின் மனித உடல் உறுப்புகளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. உடலுறவின் குறியீடாகவும் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ரோஜா பூக்கள் கொடுக்கக் காரணம் ?
dnaindia

விக்டோரியா காலத்தில் பெண்கள் தங்களின் ஆசைகள், எண்ணங்களை வெளிப்படுத்த ஒவ்வொரு வண்ண ரோஜா பூவைத் தருவார்களாம்.

உதாரணமாக சிவப்பு ரோஜாவை தந்தார்கள் என்றால் கணவர் ரொமாண்டிக் மூடில் வர வேண்டும் என்று அர்த்தமாம். இதேபோல்தான் வெள்ளை , மஞ்சள் ரோஜாக்களுக்கும் அர்த்தம்.

சிவப்பு நிற ஆடை அணியக் காரணம் ?
hum3d.com

சிவப்பு நிறம் பாலியல் உணர்வைத் தூண்டும் நிறமாக கருதப்பட்டது. எனவே சிவப்பு நிற ஆடையில் காதலியோ, காதலனோ எதிரே வரும் போது எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பு ஏற்படுமாம். அதற்காகத்தான் சிவப்பு நிற ஆடை அணியப்படுகிறது.

சாக்லெட் பரிமாறிக்கொள்ள காரணம் ?
Google

1800 காலகட்டத்தில் சாக்லெட் என்பது பணக்காரர்கள் மட்டுமே உண்ணக் கூடியதாக இருந்தது ஆனால் கேட்பெர்ரி அனைவரும் உண்ணக் கூடிய வகையில் குறைந்த விலைக்கு அதிக கோகோ பட்டர்களை பயன்படுத்தி சந்தைப்படுத்தியது இந்த சுவை ரோமானியர்களை வெகுவாக ஈர்த்தது.

பின் காதலர் தினத்தில் ஹார்ட் குறியீடு, குப்பிட் குறியீடுகள் கொண்ட சாக்லெட்டுகளை வெளியிட்டு, காதலர் தினத்தில் சாக்லெட்டை பிரதான பரிசாக மாற்றியது.

உளவியல் ரீதியாக சாக்லெட் உண்டால் கிளர்சியூட்டக்கூடிய உணர்வை ஏற்படுத்தும் என்றும் கண்டறிப்பட்டுள்ளது.

காதலின் கடவுளாக Cupid இருக்கக் காரணம் ?
iStock

காதல் அம்பு விடும் குப்பிட் குறியீடு, காதல் பரிசுகளில் காணக்கூடும். குப்பிட், சைக் என்கிற பெண்னைக் கண்மூடித்தனமாகக் காதலித்துள்ளார்.

மேலும் குப்பிடை வீனஸ் கிரகத்தின் மகன் என்று ரோமானியர்கள் போற்றியுள்ளனர். அதனால் காதலை பூமியில் பரப்ப வந்த காதல் கடவுளாக அவரைப் போற்றியுள்ளனர்.

Greeting Card வழங்கக் காரணம் ?

DHgate.com

வேலண்டைன், கைதியாக சிறையில் இருந்தபோது அவருக்கும் காதல் மலர்ந்தது. சிறைக் காவலரின் பெண் மீது காதல் ஏற்பட்டு அவருக்காக from your valentine என்கிற தலைப்பில் முதல் முறையாகக் கடிதம் எழுதினார். அப்படி பல கடிதங்களை தன்னுடைய இறுதி நாள் வரை எழுதினார்.

அதன் தொடர்ச்சிதான் இன்று வரை காதலர்கள் தங்களின் காதலிக்காக கடிதம் , க்ரீட்டிங் கார்டுகள் வழங்கக் காரணம்.

காதல் பறவைகள் வரக் காரணம் ?
Michael Russell / Getty Images

14-ம் நூற்றாண்டில் ஜியோஃபெரி சாசர் 'on st.valentine day' என்கிற தலைப்பில் ஒரு கவிதை எழுதியுள்ளார்.

அவர்தான் முதல் முறையாக பறவைகளுக்குள்ளும் காதல் மலரும் என வர்ணித்தார்.

பின் அதேபோன்று இலையுதிர் காலத்தில் காதல் பறவைகள் இணைவதால் தான் ஆராய்ச்சியில் காதலில் காதல் பறவை குறியீடு இருக்கிறது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...