எம் மக்களுக்காக பொங்கப்போகும் மனிதம்! இன்னிசை மழையில் நனைய நீங்கள் தயாரா?

Report Print Gokulan Gokulan in சிறப்பு
0Shares

எதிர்வரும் சனிக்கிழமை அதாவது ஜனவரி மாதம் 30ம் திகதி கனடா ரொரன்ரோ நேரம் காலை 10:30 மணிக்கு (இலங்கை நேரம் சனிக்கிழமை இரவு 9 மணிக்கு) அருமையான ஒரு இசை நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந் நிகழ்ச்சி முகநூல் ஊடாகவும், வெலையொளி ஊடாகவும் ஒளிபரப்பப்படவுள்ளது.

இந் நிகழ்வினை பல காலமாக தாயக மக்களுக்கு நிவாரண உதவிகளை ஒருங்கமைத்து வரும் மின்னல் செந்தில்குமரன் அவர்கள் நடாத்தவுள்ளார்.

கனடிய கலைஞர்களுடன் தமிழகத்தில் பிரபலம் வாய்ந்த லக்ஷ்மன் அவர்களின் நகைச்சுவை மிமிக்ரி நிகழ்ச்சியும், அவரது துணைவியார் மன்மதராசா பாடல் புகழ் மாலதி அவர்களின் பாடல்களும் இடம்பெற உள்ளன.

ஈழத்தில் இருதய நோயினால் உயிருக்கு போராடும் ஏழை நோயாளிகளின் அறுவைச் சிகிச்சைக்கான நிதி தேவைகளுக்கும், கிளிநொச்சியில் நடமாடும் மருத்துவ சேவையினை தொடர்வதற்கும், பிற வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கும் இந்த நிகழ்ச்சி நடாத்தப்படவுள்ளதாக அறியப்படுகின்றது.

இந் நிகழ்ச்சி இலவசமாக ஒளிபரப்பப்பட்டாலும் தமிழ் உறவுகள் தங்கள் நிதி அன்பளிப்புக்களை பேபால் மூலமாகவும் ஈ-ட்ரான்ஸ்பேர் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் விஷேடம் என்னவெனில் கிடைக்கப்பெறும் முழுத் தொகையும் மக்களின் தேவைகளுக்காக மட்டுமே வழங்கப்படவுள்ளது.

நிதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி - info@nivaranam.com

நிகழ்வின் வலையொளி இணைப்பு

இந் நிகழ்வின் முகநூல் இணைப்பு

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்