சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை, ஆவணி மாத பூஜைக்கான தேதி அறிவிப்பு

Report Print Arbin Arbin in ஆன்மீகம்

சபரிமலையில் நடைபெறும் நிறைபுத்தரிசி பூஜை ஆகஸ்ட் 8 ஆம் திகதியும், ஆவணி மாத பூஜை ஆகஸ்ட் 16 திகதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள்ள்து.

புதிதாக வயலில் விளையும் நெற்கதிர்களை ஐயப்பன் சுவாமிக்கு சமர்பணம் செய்வார்கள். இவ்வாறு சமர்பணம் செய்யப்படும் நெற்கதிர்களையே நிறைபுத்தரிசி பூஜை என கூறுவர்.

நிறைபுத்தரிசி பூஜைக்கான நேரத்தை திருவிதாங்கூர் அரண்மனையில் தான் முடிவு செய்யப்படும்.

இதனால், இந்த ஆண்டுக்கான, பூஜை வரும் ஆகஸ்ட் 8 ஆம் திகதி நடைபெறும் என்றும், அதற்கான நெற்கதிர்கள் திருவிதாங்கூர் அரண்மனையிலிருந்து கொடுத்து அனுப்பபடும் .

பின்பு அன்று காலை 5 மணி அளவில் ஐய்யப்பனுக்கு செய்ய வேண்டிய வழக்கமான பூஜைகள் நடைபெறும். அதன் பின்னர் கொண்டுவரப்பட்ட நெற்கதிர்களை மேல்சாந்தி நம்பூதிரி தன் தலையில் சுமந்து கோவிலுக்குள் கொண்டு செல்வார்.

அதை தந்திரி அவர்கள் ஐயப்பன் சுவாமிக்கு சமர்பணம் செய்து பூஜைகள் நடத்துவார். பூஜைகள் முடிந்த பின்பு ஐய்யப்பன் சுவாமி நெற்கதிர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் வழங்குவார், அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணி மாத பூஜைக்காக நடை ஆகஸ்ட் 16 ம் திகதி திறக்கப்படும், ஆனால் அந்நாளில் பூஜைகள் எதுவும் கிடையாது. அதற்கு அடுத்த நாள் 17 ம் திகதி நடை திறக்கப்பட்டு 5 மணி அளவில் நிர்மால்ய தரிசனம் நடைபெறும்.

அதன் பின்னர் தொடர்ந்து 5 நாட்கள் நெய் அபிஷெகம், உஷ பூஜை, உச்ச பூஜை, புஷ்பாபிஷேகம் மற்றும் மாலையில் தீபாரதனை காட்டப்பட்டு, இரவு 7 மணிக்கு படிபூஜை நடைபெறுகிறது. ஆவணி 21 ம் திகதி நடை திரும்ப அடைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஆவணி மாதம் மலையாளிகள் ஆண்டு பிறப்பு என்பதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதும் காரணத்தினால், அதை ஈடு செய்யும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments