திருவையாறில் பக்தர்களுக்கு அருள்பாளித்த கயிலை ஆண்டவன்

Report Print Kalam Kalam in ஆன்மீகம்

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில், அப்பர் கயிலை காட்சி அளித்து பக்தர்கள் அனைவருக்கு அருள்பாளித்தார்.

திருமுனை நாட்டில், திருவாமூர் புகழானருக்கும், மாதினியாருக்கும் மகனாய் பிறந்தவர் அப்பர், இவருக்கு திலகாவதி என்ற சகோதரியும் உண்டு.

இவருக்கு சூளை நோய் பாதிக்கப்பட்டிருந்தது. அந்நோயில் இருந்து மீண்டு திருநாவுக்கரசர் என அனைவராலும் போற்றப்பட்டார்.

அவர் ஒரு நாள் தலையாத்திரை மேற்கொண்டு கயிலை சென்றார். அவ்வாறு செல்லும் வழியில் இறவன் முனிவர் வேடத்தில் வந்து உன்னால் முடியாதது, பக்கத்தில் இருக்கும் திருவையாறு சென்று அங்கு உள்ள குளத்தில் மூழ்கச்செய்து பழுதில் சீர் திருவையாற்றில் காண் என கூறினார்.

இறைவன் கூறியதை மனதில் வைத்துக்கொண்டு, ஆடி அமாவாசை நாளில் ஐயாற்றுத் திருக்குளத்தே வந்து எழுந்தருளினார். கயிலை காட்சியளித்த ஐயாற்று ஆலயத்தை கண்டு மாதர் பிறைக் கண்ணியானை என தொடங்கும் பாடல் ஒன்றை பாடினார்.

இதே போல் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் நேற்று அப்பர் கயிலை காட்சி நடைபெற்றது. இதை கண்ட பக்தர்கள் அனைவரும் ஐயாறப்பரை தரிசித்து ஆலயத்தை வழிபட்டு சென்றனர்.

இரவு அப்பர் சந்நதியில், சிவபெருமான் காட்சி கொடுக்கும் கயிலை காட்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments