ஆசைப்பட்டதை அடைய வேண்டுமா?

Report Print Aravinth in ஆன்மீகம்

திடீரென்று உங்களுக்கு தெரியாத ஒரு செயலை செய்ய சொன்னால் உங்களால் செய்ய முடியுமா? முடியாது இல்லையா?... காரணம் அந்த செயல் நமக்கு தெரியாது.

பின்பு அதை தெரிந்து கொண்டு செய்தால் மட்டுமே செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். அது போல தான் இறைவன் ஒருவர் இருக்கிறதை நாம உணர்வதற்க்கு நமக்கு உதவுவது தான் , கோவில்கள் , மந்திரங்கள், தியானம் இப்படிப் பல விஷயங்கள்.

நீங்க எதோ ஒரு வேலையா இருக்கிறீங்க ... அப்போ , உங்க பேர் சொல்லி , யாரோ ஒருவர் கூப்பிட்டதும், திரும்பி பார்க்கிறீங்க இல்லையா?

இறைவனை , அவனது கோவிலில் சென்று , நீங்கள் இந்த மந்திரங்கள் சொல்லி அழைக்கும்போது - அவனும் உங்களுக்கு செவி சாய்ப்பான்.. ராகு கால வேளையில் - லலிதா சஹஸ்ரநாமமோ, அல்லது சிவ ஆலயங்களில் ஸ்ரீ ருத்ரமோ, சமகமோ சொல்லும்போது - நீங்கள் அந்த பரம்பொருளால் நேரடியாக கவனிக்கப்படுவீர்கள்..... இது போதாதா?

கடவுளை எப்படி வேண்டுவது?

உங்கள் தீராத பிரச்னைகளை , தீர்க்க சொல்லி - மனதில் மன்றாடுங்கள். உங்கள் குழந்தை ஒரு சில விஷயங்களில் அடம் பிடிக்குமே. சமயத்தில் , அந்த குழந்தை கேட்காமலே வாங்கி கொடுப்பீர்கள். சமயத்தில் , அது அழுது , முரண்டு பிடித்தாலும் - உங்களுக்கு அதை நிறைவேற்ற சக்தி இருந்தால் வாங்கி தருவீர்கள். இல்லையெனில் , உங்கள் இயலாமை , அந்த குழந்தைக்கு முதுகில் ஒரு அடியாக வெளிப்படும். அடித்த பிறகு , உங்களுக்கும் மனசு வலிக்குமே... !

இதில் ஒன்றை கவனியுங்கள். ஒரு விஷயம் , கிடைக்க வேண்டும் என்பதற்காக - குழந்தை உங்கள் கவனத்தை திருப்புகிறது. அதற்குத் தெரியும், நீங்கள் மனது வைத்தால்... அந்த ஆசையை நிறைவேற்ற முடியும். அந்த கோரிக்கை , நியாயமானது எனில், நீங்கள் உடனே இல்லையெனினும், விரைவில் அந்த ஆசையை பூர்த்தி செய்ய முயலுவீர்கள்.. பிற்காலத்தில், ஒரு சில கெடுதல் ஏற்படும் விஷயங்கள் , என்று இருந்தால் - எப்பாடு பட்டாவது , அதை தடுக்க முயல்வீர்கள்.

அதே தான் .. உங்கள் கோரிக்கை என்னவென்று மனதுக்குள் வேண்டுங்கள்.. கச்சா முச்சான்னு இருக்க வேண்டாம்.. ஒரே விஷயம்.. நியாயமான கோரிக்கையாக இருக்கட்டும்.

உங்கள் ஆசையை நிறைவேற்ற யார் இருக்கிறார்? உங்கள் இஷ்ட தெய்வம்.

அடிக்கடி அந்த தெய்வத்தோட சன்னதிலே போய் நில்லுங்க.. பதிகம் பாடுங்க, ஸ்லோகம் சொல்லுங்க.. விரதம் இருங்க... ! மந்திரங்கள் எனக்கு புரியலையே என்று நீங்கள் வருத்தப்படாதீர்கள்.. I need something to eat ... என்று நீங்கள் புரியாமல் சொன்னால் கூட , ஆங்கிலம் தெரிந்த உங்கள் நண்பர் , உங்களுக்கு சாப்பிட ஏற்பாடு செய்வார்.. இந்த மந்திரங்கள் அனைத்தும், அவன் அருளால் , அவன் பக்தர்களுக்கு - சில நற்காரிய , காரணங்களுக்காக உருவானவையே.. ! அவனுக்கு இதன் அர்த்தம் நன்றாகவே புரியும் !

ஒரு ஆபீஸ்ல ப்ரோமோசன் வாங்குறதுக்கு நீங்க என்ன பாடு எல்லாம் படுறீங்க..? எவ்வளவு வித்தை எல்லாம் செய்யுறீங்க.. அதுக்கு அப்புறம் நீங்க தகுதி வாய்ந்தவர்ங்கிறதை அவங்க உணர்ந்துட்டா , உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்குது இல்லையா? அதே மாதிரி அத்தனை வித்தையையும், கடவுள் கிட்டேயும் நீங்க காட்டனும்.

கண்டிப்பாக திறமை மதிக்கப்படுவது போலே , உங்களுக்கும் இறைவன் முழு கருணை அளிப்பான்... சற்று தாமதம் ஆகலாம் .. ஆனால் , வெகுமதி நிச்சயம்.. நீங்கள் அவன் குழந்தை.. உங்களை ஏங்க வைத்து , அவன் சந்தோசம் அடையப்போவது இல்லை..

உங்கள் பெற்ற தாயிடம் வேண்டுவது போல , உரிமையுடன் - அந்த உலக மாதாவிடம் கேளுங்கள்.. ! தாய்க்கு கருணை ரொம்ப அதிகம்.. ! ஒரு எறும்பு , குருவி மேல் கூட பாசம் வைக்கும் அன்னை , உங்கள் மேல் இன்னும் பாசமுடன் இருப்பாள்.

தந்தை , உங்கள் திறமைக்கு ஏற்ப கொடுப்பவர். அதனால் , உங்கள் திறமையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.. நீங்கள் எந்த துறையில் இருந்தாலும், அந்த துறையில் வல்லவராக முயற்சி செய்யுங்கள்.. குழந்தை திறமை சாலி எனில், முதல் ஆளாக ஊக்குவிப்பது தந்தை தான்.. !

என்ன தான் உமை அன்பைப் பொழிந்தாலும், ஈசன் உங்கள் திறமை வளர்க்க சந்தர்ப்பம் கொடுத்து , அதன் பின் உங்கள் ஆசை நிறைவேற செய்வான். !

அதனால் , அந்த பரம்பொருளின் கவனத்தை திருப்புங்கள். உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்.. !

ஆசை பட்டது , கிடைக்கும்போது - மனம் அடையும் ஆனந்தத்திற்கு அளவு இல்லை.. !!

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments