பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ராமாயணம்

Report Print Aravinth in ஆன்மீகம்

ராமாயணத்தில் கூட ஒரு நிகழ்வு பெண்களுக்கு எச்சரிக்கை விடும் வகையில் அரங்கேறியுள்ளது உங்களுக்கு தெரியுமா?

ராமன் 14 வருடம் வனவாசம் செல்கையில் உடன் சீதை மற்றும் லட்சுமனன் சென்றனர்.

அப்பொழுது சீதை பிராட்டியார் ஒரு அழகிய மானை கேட்டுள்ளார். அப்பொழுது மானை கொண்டு வருவதற்காக லட்சுமணனையும், சீதை பிராட்டியாரையும் கூடாரத்தில் விட்டுவிட்டு ராமன் மட்டும் புறப்பட்டு சென்றுவிட்டார்.

ராமன் சென்று வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. எனவே லட்சுமணன் தேடிச் செல்ல நினைத்தார்.

அப்பொழுது, கூடாரத்தை சுற்றி ஒரு வட்டமிட்டு அதை தாண்டி வெளியே வரக் கூடாது என சீதை பிராட்டியாரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

இதற்கு 'லட்சுமணர் ரேகை' என்று பெயர். ஆனால் இந்த செய்தி வால்மீகி ராமாயணத்திலோ அல்லது கம்பராமாயணத்திலோ இடம்பெறவில்லை. செவிவழி கதையாக மக்கள் மத்தியில் இது கூறப்படுகிறது.

இந்த தருணத்தை தமக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொண்ட ராவணன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ராவணன், துறவி வேடமணிந்து சீதையிடம் பிச்சை கேட்க சீதையும் கோட்டை தாண்டி வந்து பிச்சை போட்டுள்ளார்.

இந்த காரணத்தில் மட்டுமே சீதை ராவணனிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. மூலநூலில் இல்லாவிட்டாலும் கூட, பெண்கள் தங்களின் வரம்பு அறிந்து விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும் விதத்தில் உள்ளது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments