தமிழ் புத்தாண்டு அன்று என்ன செய்ய வேண்டும்?

Report Print Meenakshi in ஆன்மீகம்

தமிழ்ப்புத்தாண்டு சித்திரை மாதம்(ஏப்ரல் 14) முதல் தேதி மிகவும் சிறப்பான நாள். அன்றைய தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து புதிய ஆடைகளை அணிந்து கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வர்.

எல்லா கோயில்களிலும் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும். சகல நற்காரியங்களையும், செய்வதற்கேற்ற காலம் இது. தமிழ் வருடபிறப்பான சித்திரை மாதம் முதல் நாளை கேரள மக்கள் கொன்னம்பூ வைத்து பூஜிக்கின்றனர்.

கேரளாவில் சித்திரை விஷீவன்று கனி காண்பது மரபு. பங்குனி கடைசி நாள் அன்று இரவு பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு பூச்சுடுவர்.

கோலமிட்ட மனைப்பலகையில் முகம் பார்க்கும் கண்ணாடி வைத்து இருபுறமும் குத்துவிளக்கு வைப்பார்கள். ஒரு தாம்பளத்தில் பூ, பழம், வெற்றிலைபாக்கும், இன்னொன்றில் கிண்ணங்களில் அரிசிபருப்பு, தங்க, வெள்ளிக்காசுகள் ஆபரணங்களும் வைப்பர்.

இன்னொரு தாம்பளத்தில் முக்கனிகளை வைப்பர். செவ்வாழை, நேந்திரம் வாழை, பலாப்பழம், கொன்றைப் பூச்சரம், தென்னம் பூ கொத்தும் வைக்கப்படும். மறுநாள் அதிகாலை வீட்டின் மூத்தவர் எழுந்து பூஜை அறைக்கு வந்து குத்து விளக்கேற்றுவார்.

சுவாமியை வணங்கியபின் வீட்டில் உள்ளவர்களை வயதுப்படி கண்மூடிவரச் செய்து அறையில் கண் திறந்து காண வைப்பதுதான் விஷீக்கனி காணல். பின் எல்லாருக்கும் காசு தருவார். இதை கை நீட்டம் என்பர். பின் அவரிடம் ஆசி பெறுவர்.

நீராடியபின் புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தபின் அறுசுவை உணவு உண்பர்.

குருவாயூர் கோயிலுக்கு முதல் நாள் இரவே சென்று காத்திருந்து அதிகாலை நடைதிறந்ததும் குருவாயூரப்பனை தரிசிப்பார்கள். ஆலயத்தில் கைநீட்டப் பணம் தருவதை ஏழை. பணக்காரர் என்ற வித்தியாசமின்றி வாங்கி செல்வர்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments