அட்சயதிருதியை அன்று தங்கம் வாங்க ஏற்ற நேரம்

Report Print Meenakshi in ஆன்மீகம்
324Shares
324Shares
ibctamil.com

அட்சயதிருதியை அன்று தங்கம் வாங்கினால் செல்வம் சேரும் என்பது அனைவரது நம்பிக்கையாகும்.

அட்சயைதிருதியை நாளில் குரு ஓரை, சுக்கிர ஓரைகளில் தங்கம் வாங்கலாம் என ஜோதிடர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு மாதத்திலும் வருகிற வளர்பிறை காலத்தில் 3வது திதியாக அட்சயதிருதியை வருகிறது.

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வருகிற திருதியை அட்சய திருதியை என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான அட்சய திருதியை ஏப்ரல் 28,29ம் திகதியில் கொண்டாடப்படுகிறது.

இரு கிரகங்களின் அம்சமான தங்கம் மற்றும் வெள்ளி உள்ளது. மஞ்சள் நிறமான தங்கம் குருவினையும் தங்கத்தில் செய்யப்படும் நகைகள் மற்றும் வெள்ளியானது சுக்கிரனையும் குறிக்கிறது.

எனவே தங்கம் வெள்ளி வாங்க விரும்புவோர் குரு, சுக்கிர ஹோரைகளில் வாங்கலாம். இதுவே முழுமையான பலனை தரும்.

அட்சய திருதியை

குபேரன் தான் இழந்த செல்வங்களை அட்சய திருதியை அன்றே பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

அதுமட்டுமல்லாமல் கிருஷ்ண பகவானுக்கு அவல் கொடுத்து குசேலன் குபேரன் ஆனதும் இந்நன்னாளிலே.

பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின் போது சூரிய தேவனிடம் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரத்தை பெற்றதும் இந்த தினத்தில் தான்.

நல்ல நேரம்

ஏப்ரல் 28-ம் திகதி காலை 10 முதல் 11 மணி வரை குரு ஓரை, பிற்பகல் 1 முதல் 2 மணி வரை சுக்கிர ஓரை, மாலை 5 முதல் 6 மணி வரை குரு ஓரை காலமாகும்.

இதே போன்று 20ம் திகதி காலை 7 முதல் 8 மணி வரையிலும், 10 முதல் 11 மணி வரை தங்கம், வெள்ளி வாங்க நல்ல நேரம் என ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

அட்சய திருதியையன்று தங்கம், வெள்ளி தான் வாங்க வேண்டும் என்பதில்லை. அந்நாளில் கனி வகைகள், உப்பு, சாமி படங்கள், மஞ்சள் நிற துணிகள், எழுது கோல், சங்கு, பூஜையறை சாமான்கள், தானியங்கள், மளிகை பொருள்கள், சோறு வடிக்கும் பாத்திரம், சர்க்கரை, குங்குமம், மஞ்சள் போன்றவற்றினையும் வாங்கலாம்.

அட்சயதிருதியை அன்று அன்னதானம் செய்தல் நல்லது. பசு மாட்டிற்கு வாழைப்பழம் வழங்கலாம். தங்கம், வெள்ளி வாங்க இயலாதவர்கள் உப்பினை வாங்கலாம். ஏழை ஒருவருக்கு அன்னதானம் அளிக்கலாம்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments