அஷ்டமி இரவில் மனித இரத்தத்தை காணிக்கை செலுத்தும் பக்தர்கள்: எதனால் இப்படி?

Report Print Raju Raju in ஆன்மீகம்

இந்தியாவில் உள்ள போரோதேவி கோவிலில் மனித இரத்தம் காணிக்கையாக செலுத்தப்படும் கலாசாரம் இன்னும் பின்பற்றப்பட்டு வருகிறது.

நரபலி, இரத்த காணிக்கை போன்ற பழக்கவழக்கங்கள் பண்டைய காலத்தில் அதிகம் இருந்தன.

இந்த நவீன உலகில் இது குறைந்தாலும், உலகின் சில இடங்களில் இன்னும் இது போன்ற சம்பிரதாயங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

அப்படி, இந்தியாவில் அமைந்திருக்கும் போரோதேவி கோவிலில் மனித ரத்தம் இன்றும் காணிக்கையாக கடவுளுக்கு அளிக்கப்படுகிறது.

கடந்த 500 ஆண்டுகளாக இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு அஷ்டமி அன்றும் இரவு போரோதேவி கோவிலில் உள்ள கதவுகள் மூடப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன.

அப்போது மனித இரத்தம் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.

பஷி என்னும் நபர், முன்னொரு காலத்தில் நாரனராயன் என்ற அரசரால் மத நடவடிக்கைகளை கண்காணிக்க பணியமர்த்தப்பட்டுள்ளார்.

பிறகு அவர் அப்போது நடைமுறையில் இருந்த மனித நரபலி பற்றி அரசரிடம் தடை செய்ய கூறியதாக சில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் அதிக அளவில் ரத்தம் காணிக்கையாக செலுத்தப்பட்ட நிலையில், தற்போது போரோதேவி கோவிலில் மூன்று சொட்டு என்ற அளவில் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments