தனி பாறையில் உருவான அதிசய ஆலயம்

Report Print Kavitha in ஆன்மீகம்
484Shares
484Shares
lankasrimarket.com

தமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த குகைக்கோயில்களில் கழுகுமலை வெட்டுவான் கோயிலும் ஒன்றாகும், இக்கோயில் 8ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் செதுக்கப்பட்டதாகும்.

கழுகுமலை வெட்டுவான் கோயில் என்பது தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டியிலிருந்து 22 கி.மீ தொலைவில் கழுகுமலை என்னும் பேரூராட்சியில் அமைந்துள்ளது.

மலைப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் ஒரே கல்லால் ஆனதாகும், கருங்கல்லைக் குடைந்து இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது

இக்கோவில் திராவிடக் கட்டிடக்கலையைப் பயன்படுத்தி சுமார் கி.பி. 800-ல் பாண்டிய மன்னன் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது.

சமணர்களின் முக்கியப்பள்ளிகளுள் ஒன்றாக விளங்கும் இவ்விடத்திலுள்ள மலையின் சரிவில் சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இங்கு சமணசித்தாந்தம் போதிக்கப்பட்டது, இச்சிற்பங்கள் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டவை.

சமய இறையாண்மைமிக்க இடமாகவும், கலைக் கருவூலமாகவும் திகழும் கழுகுமலை, உலக மரபுச் சின்னங்களின் பட்டியலில் இடம்பெறக்கூடிய வகையில் சிற்பக் கலையை தன்னகத்தே கொண்டுள்ளது.

காரணம் கழுகுமலை கடினமான பாறை அடுக்குகளால் ஆனது, இவ்விடத்தில் சிற்பங்களைச் செதுக்கியிருக்கிறார்கள் என்றால் முன்னோர்களின் உழைப்பும், தொழில்நுட்பமும் வியப்புக்குரியதாகும்.

இப்பாறைகள் எண்ணற்ற புடைப்புச் சிற்பங்களையும், மிகவும் நுணுக்கமான சிற்பங்களையும் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது.

தற்போது கோயிலின் முழு பணியும் முற்றுப்பெறாமல், கருவறையில் பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்