மஹா சங்கடஹர சதுர்த்தி விரதம்

Report Print Thayalan Thayalan in ஆன்மீகம்
மஹா சங்கடஹர சதுர்த்தி விரதம்
98Shares
98Shares
lankasrimarket.com

விநாயகருக்கு உரிய விரதங்களில் சங்கடஹர சதுர்த்தி விரதம் முக்கியமானது. அன்றைய தினம் அன்றைய தினம் விரதமிருந்து விநாயகரை வழிபட்டால் தொல்லைகள், இடையூறுகள் நீங்கும். இது விநாயகருக்கு உகந்த நாளாகும்.

தேய்பிறை சதுர்த்தியில் இரவுப் பொழுதில் சந்திரன் பிரதானமாகிறான். இது விநாயகப்பெருமானால் சந்திரனுக்கு சாபம் நீங்கிய நாளாகும்.

இன்று விரதமிருந்து, விநாயகருக்கு பிடித்தமான மோதகம் (கொழுக்கட்டை) நிவேதனம் செய்து மற்றவர்களுக்கு வழங்குவது நல்லது.

அதோடு, இன்று விநாயகருக்கு விசேஷமாக பூஜை செய்வதால், அவர் மிகவும் மகிழ்ந்து எல்லா இடையூறுகளையும் நீக்கி அருள்வார். இந்த பூஜையின் நிறைவில் ரோகிணியுடன் உறையும் சந்திரனையும் பூஜிக்க வேண்டும்.

ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் வரும் தேய் பிறை சதுர்த்தியானது மகா சங்கடஹர சதுர்த்தி நாளாகும். அன்றைய தினம் விநாயகரை வழிபட மிக உகந்த நாளாகும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்