ராகு தோஷம் இருக்கா? இந்த வழிபாட்டை செய்திடுங்கள்

Report Print Fathima Fathima in ஆன்மீகம்

அனுமன் என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் இறைவன் இராமனின் பக்தனும், இந்துகளின் கடவுளும் ஆவார்.

அனுமன் எடுத்த வடிவங்களில் அற்புதமானதும் ‘தசபுஜ ருத்ரவீர்ய ராமாஞ்சநேய’ வடிவம். ரக்தாட்சன், ரக்தபீஜன் எனும் அரக்கர்களை இத்திரு உருவில்தான் வதைத்தானாம் அனுமன்.

நோய், பயங்கள், கிரக தோஷங்கள், தீயோரின் தொல்லை முதலியவை அழியும்படி அருள்பவன் அவன். விபத்து, ஆபத்துகள், சிறைவாசம் போன்றவை இவனை நினைப்பதாலேயே நெருங்காது ஓடிவிடும்.

பொதுவாக அனுமனுக்கு வெற்றிலையில் பாக்கு வைத்து ஒற்றைப்படை எண்ணிக்கையில் மாலையாகக் கட்டி வியாழன், சனிக்கிழமைகளில் பிரார்த்தனை செய்துகொண்டால், மங்கலமான மண வாழ்க்கை கிட்டும்.

இனிமையான வாழ்வு வேண்டும் என இனிப்புகளாலும், ராகு தோஷம் நீங்க உளுந்து வடையை மாலையாகக் கட்டி சாத்தியும் வழிப்பட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஜீதிகம்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்