கோவிலில் கடவுளை வழிபடும் போது தண்ணீர், பால், நெய், இளநீர், சந்தனம், மஞ்சள் போன்ற பல அபிஷேகங்கள் நடைபெறும்.
மூலஸ்தானத்தில் இறைவனுக்கு செய்யப்படும் அந்த அபிஷேக நீர் அனைத்து வெளியேறுவதற்கு, கருவறைக்கு வெளியே ஒரு வழி இருக்கும்.
அதன் வழியாக வரும் அபிஷேக நீரை பலரும் பாட்டிலில் பிடித்துச் செல்வார்கள். சிலர் அந்த நீரை தனது கையால் பிடித்து தலையில் தெளித்து வாயில் ஊற்றிக் கொள்வார்கள்.
ஏனெனில் அந்த அபிஷேக நீர் கருவறையில் உள்ள இறைவன் திருமேனியில் பட்டு புனித மடைவதுடன், அந்நீரில் இறைவன் உடன் உறையும் தேவ கணங்களின் ஆசிகளும் கலந்திருக்கும் என்பது ஒரு ஐதீகமாக உள்ளது.
அதனால் கடவுளுக்கு செய்யும் அபிஷேக நீரை வீணாக்காமல், நம் வீடு அல்லது அலுவலகங்களில் தெளித்து கூட வழிபாடு செய்து சிறந்த செல்வ வளங்களை பெறலாம்.