வீட்டில் எந்த திசையில் கிணறு தோண்ட வேண்டும்?

Report Print Printha in ஆன்மீகம்

வீடு காட்டுவது முதல் வீட்டில் கதவு, சமையல் அறை, ஜன்னல் போன்ற அனைத்தும் எந்த திசையில் அமைக்க வேண்டும் என்பதற்கு வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்புகள் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, நம் வீட்டில் எந்த திசையில் கிணறு அமைப்பது அதிர்ஷ்டமாக இருக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.

எந்த திசையில் கிணறு அமைக்க வேண்டும்?

ஒரு வீட்டு மனையின் வடகிழக்கு திசையில் கிணறு தோண்ட வேண்டும். அந்த திசையில் சௌகரியப்படாவிட்டால், வடக்கு திசையில் தோண்டலாம்.

கிணறு மட்டுமில்லாமல் போர் போடுதல், கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டி ஆகியவற்றை அமைப்பதற்கும் இதே திசைகளை பயன்படுத்த வேண்டும்.

ஆனால் எக்காரணம் கொண்டும் தென்கிழக்கு திசையில் மட்டும் வீட்டு மனையின் மையப்பகுதி ஆகியவற்றில் கிணற்றை அமைக்கக் கூடாது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...