வெள்ளிக் கிழமையில் இதை செய்யுங்கள்: செல்வம் அதிகரிக்கும்

Report Print Printha in ஆன்மீகம்

பணக் கஷ்டம் தீர்ந்து நம் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க தொடர்ந்து வெள்ளிக் கிழமையில் ஒருசில செயல்களை பின்பற்றி வந்தால் நல்ல பலன் உண்டாகும்.

வெள்ளிக் கிழமை என்ன செய்ய வேண்டும்?
  • செல்வத்திற்கு உரிய மகாலட்சுமியை தொடர்ந்து 24 வெள்ளிக் கிழமை வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.
  • வெள்ளிக் கிழமை அரசமரத்தடி விநாயகரை வணங்கி 11 தீபம் ஏற்றி, 11 முறைகள் வலம் வந்தால் பணவரவு நிரந்தரமாகும்.
  • வெள்ளிக் கிழமை பெருமாள் கோவிலில் உள்ள தாயாருக்கு பசும்பாலில் அபிஷேகம் செய்தால் பண வரவு உண்டாகும்.
  • வெள்ளிக் கிழமையில் சுக்கிர ஓலையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் கூறி செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சனை செய்ய தனலாபம் கிடைக்கும்.
  • வியாழன் கிழமை மாலை 4-5 மணி நேரம் குபேர காலமாகும். அந்நேரத்தில் குபேரனை வழிபட்டு வர பண வரவு அதிகரிக்கும்.
  • தாமரை திரி போட்டு குபேரனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் பண வரவு அதிகமாகும்.
  • அமாவாசை அன்று நம் முன்னோர்கள் இறந்த திதியில் தானம் செய்தால் தனலாபம் உண்டாகும்.
  • சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையும் லட்சுமி மந்திரம் கூறி வீடு முழுவதும் தெளித்திட செல்வம் சேரும்.
  • ஓடும் வெள்ளைக்குதிரை, ஜோடி கழுதை படம் ஆகியவற்றை அடிக்கடி பார்த்து வர பண வரவு அதிகமாகும்.
  • வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்த்து வந்தால் பணத்தட்டுப்பாடு நீங்கும். ஆந்தையை வழிபட்டால் பண வரவு உண்டாகும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers