முள்படுக்கையில் பெண் சாமியாரின் அருள் வாக்கு

Report Print Fathima Fathima in ஆன்மீகம்
198Shares
198Shares
lankasrimarket.com

தமிழ்நாட்டில் முள்படுக்கையில் படுத்து பெண் சாமியார் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே லாடனேந்தலில் பூங்காவனம் முத்துமாரியம்மன், மாசாணி அம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில் பெண் சாமியாரான நாகராணி அம்மையார் ஆண்டுதோறும் 48 நாட்கள் விரதமிருந்து மார்கழி 18ம் திகதி முள்படுக்கையில் பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்குவது வழக்கம்.

இதன்படி இந்தாண்டும் கார்த்திகை 1ம் திகதி விரதத்தை தொடங்கிய நாகராணி அம்மையார், நேற்று அருள்வாக்கு வழங்கினார்.

இதற்காக இலந்தை முள், கற்றாழை முள், சப்பாத்திக்கள்ளி போன்ற முட்களால் 6 அடி உயரத்தில் படுக்கை தயாரானது.

நேற்று கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்ட நாகராணி அம்மையார், அருள் வந்து ஆடியபடியே முள்படுக்கையில் ஏறினார்.

பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறியபடியே மயங்கிய பெண் சாமியார், மூன்று மணிநேரம் படுத்திருந்து தவம் செய்தார், இக்காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்