உக்ர தெய்வம் காளியை வீட்டில் வைத்து வணங்கலாமா?

Report Print Printha in ஆன்மீகம்

காளி மிக உக்கிரமான தெய்வம் என்பதால் நம்மில் பலர் காளியை எப்படி வணங்க வேண்டும் என்பதை பற்றியே யோசிப்போம்.

அப்படி இருக்கும் போது உக்கிரமான தோற்றத்தில் காட்சியளிக்கும் இந்த காளி தெய்வத்தின் படத்தை பலர் வீட்டில் வைத்து வணங்கவும் தயங்குவார்கள்.

அதனால் பலருக்கும் காளியை வீட்டில் வைத்து வணங்கலாமா என்பது குறித்து பல சந்தேகம் இருக்கும்.

காளியை வீட்டில் வைத்து வணங்கலாமா?

காளி உக்கிரமான தோற்றத்தில் இருப்பதால் காளியின் படத்தை வீட்டில் வைக்கவே கூடாது.

ஆனால் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலிலும், கலிங்கத்துப் பரணியிலும் காளி வழிபாடு குறித்தும், அவளை வணங்குவதால் உண்டாகும் நன்மைகள் குறித்தும் பல தகவல்கள் உள்ளது.

அதில் சாந்த வடிவில் இருக்கும் காளியின் படத்தை வைத்து வணங்குவதில் தவறில்லை.

காளியை வணங்கும் சமயத்தில் கீழே உள்ள மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் கேட்ட வரம் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

காளி காயத்ரி மந்திரம்

ஓம் காளிகாயை ச வித்மஹே

ஸ்மசான வாசின்யை தீமஹி

தன்னோ கோரா ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை திங்கள் கிழமை அல்லது வெள்ளிக் கிழமையில் கூற தொடங்குவது நல்லது. மேலும் அமாவாசை நாளில் கூற தொடங்குவதும் சிறப்பாக அமையும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers