ஆபத்துக்களை முன்கூட்டியே கூறும் மகரசங்கராந்தி: 2018-19-ம் ஆண்டில் நடக்கப் போவது என்ன?

Report Print Printha in ஆன்மீகம்
598Shares
598Shares
lankasrimarket.com

உலகத்திற்கு வரவிருக்கும் சகலவிதமான கஷ்ட நஷ்டங்களை முன்கூட்டியே தெரியப்படுத்துவது காலதேவதையாக கருதப்படும் மகரசங்கராந்தி ஆகும்.

இந்த மகரசங்கராந்தி தேவதையானவள், பீடைகள் நம்மை அண்டாமல் இருக்கவும், தங்களின் சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் செயல்பாடுகளை திருத்திக் கொண்டு நன்மைகள் பெறுவதற்காகவும் உதவுகிறாள்.

2018-19-ம் ஆண்டில் என்ன நடக்கும்?

 • மலர் உற்பத்தி வெகுவாக பாதிக்கும்.

 • ஜீவராசிகளுக்கு ரோகமும், பீடையும் பிடிக்கும்.

 • மூடுபனியும், கடும் குளிரும் தாங்க முடியாத அளவிற்கு வரக்கூடும்.

 • கனத்த மழை, மின்னல் இடி, சூறாவளி புயல் ஆகிய இயற்கை சீற்றங்களினால் பாதிப்புகள் உண்டு.

 • அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் விளைச்சல் பாதிக்கும்.

 • கலைத்துறை மற்றும் கலைகள் இழந்து தள்ளாடும்.

 • யுத்தம், கலகங்களால் உயிர் சேதமும், சேதாரமும் உண்டாகும்.

 • முக்கிய பிரஜைகள், முக்கியமற்றவர்களாக ஆக்கப்படுவார்கள்.

 • போருக்கு தயார் நிலையில் இருக்க வேண்டி வரும்.

 • மலை பிரதேசங்களுக்கு மண் அரிப்பாலும், நிலச்சரிவாலும் பாதிப்புகள் ஏற்படும்.

 • வெவ்வேறு இயற்கை சீற்றங்களினால் கடுமையான பாதிப்புகள் உண்டாகக் கூடும்.

 • பொறுப்பில் உள்ளவர்கள், பொறுப்பற்ற முறையில் நடந்துக் கொள்வார்கள்.

 • சிறந்த விளையாட்டு வீரர்களின் ஆட்டம் சிறப்பாக போகும்.

 • அழிவிற்கான கண்டுபிடிப்புகள் அதிகரிக்கும்.

 • மக்கள் தொகை கிடுகிடுவென பெருகும்.

 • அதிகாரம் படைத்தவர்கள் மக்களை பிரித்து ஆள்வார்கள்.

 • சிந்தனைக்கு எட்டாத கோளாறுகள் ஏற்பட்டு, பலவாறு விபத்துக்கள் நிகழும்.

 • எதிர்பார்த்ததை விட அதிகளவில் வரிகள் வசூலிக்கப்படும்.

 • தகுதி இல்லாதவர்களே உயர் பதவியில் அமர்வார்கள்.

பரிகாரம்

மேற்கூறப்பட்ட விடயங்களை அலட்சியப்படுத்தாமல், அந்தந்த பொறுப்புகளில் இருப்பவர்கள், கடமை தவறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வழிவகுத்து ஒழுங்கான முறையில் செயல்களை துரிதமாக மேற்கொண்டால் கஷ்ட நஷ்டங்கள் நீங்கி அனைவருக்கும் நன்மைகள் உண்டாகும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்