விளக்கிற்கு பயன்படும் எண்ணெயின் பலன்கள் என்ன தெரியுமா?

Report Print Kavitha in ஆன்மீகம்
453Shares
453Shares
lankasrimarket.com

நாம் அன்றாடம் காலை மாலை இறைவனுக்கு விளக்கு ஏற்றுவதுண்டு. ஆனால் நாம் விளக்கு ஏற்றும் போதும் தெரிந்துக் கொள்ளவேண்டியவை பல உள்ளது.

  • ஒரு முகம் ஏற்றினால் நினைத்த செயல்கள் நடக்கும் என்று கூறப்படுகின்றது.
  • இரு முகம் ஏற்றினால் குடும்பம் சிறக்குமாம்.
  • மூன்று முகம் ஏற்றினால் புத்திரதோஷம் நீங்கி வாழ்வில் சந்தோஷம் நிலைக்கும்.
  • நான்கு முகம் ஏற்றினால் பணக்கஷ்டம் நீங்கி செல்வம் பெருகுமாம்.
  • ஐந்து முகம் ஏற்றினால் நற்பலன்கள் உண்டாகி வாழ்க்கை சிறந்து விளங்கும்.

விளக்கேற்றுவதில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு எண்ணெய் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

  • கணபதி - தேங்காய் எண்ணெய்.
  • நாராயணன், சர்வதேவதைகள் - நல்லெண்ணெய்.
  • மகாலட்சுமி - பசுநெய்.
  • குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்.
  • ருத்திரர் - இலுப்பெண்ணெய்.
  • பராசக்தி - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த எண்ணெய்.

நாம் எந்த எண்ணெய்யில் விளக்கேற்றுவது நல்லது. அப்படி ஏற்றுவதால் உண்டாகும் பயன்கள் உண்டாகும் என்று பார்ப்போம்

  • விளக்கு எண்ணெய் விளக்கு ஏற்றினால் துன்பங்கள் விலகும்.
  • பசுநெய் விளக்கு ஏற்றினால் சகல செல்வமும் நம்மை வந்து சேரும்.
  • நல்லெண்ணெய் விளக்கு ஏற்றினால் பீடை விலகும். எம பயம் அணுகாது.
  • ஆமணக்கு எண்ணெய் விளக்கு ஏற்றினால் தாம்பத்யம் சிறந்து விளங்கும்.
  • இலுப்பை எண்ணெய் விளக்கு ஏற்றினால் பூஜிப்பவருகும், பூஜிகப்படும் இடத்துக்கும் விருத்தி உண்டு.
  • கடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது இது இறைவனுக்கு உகந்தது அல்ல.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்