ஹோலி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகின்றது தெரியுமா?

Report Print Kavitha in ஆன்மீகம்
48Shares
48Shares
lankasrimarket.com

இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை தான் ஹோலி.

ஹோலி பண்டிகை ​பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் வரும் முழு நிலவன்று (பெளர்ணமி) உலகமெங்குமுள்ள வட இந்திய இந்துக்களால் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

பஞ்சமிக்கு (முழு நிலவிற்கு பிறகு ஐந்தாவது நாள்) சில நாட்கள் கழித்து வருகின்ற அரங்கபஞ்சமியுடன் இவ் வண்ணப் பண்டிகை முடிவடையும்.

ஹோலி உருவானதற்கு ஒரு கதை சொல்லப்படுகின்றது. பார்வதிதேவி சிவ பெருமானை மணப்பதற்கு உதவும் பொருட்டு சிவபெருமானின் மீது காமன் தன் பூக்கணையைச் செலுத்தி அவரது தவத்தைக் கலைத்தபோது காமனின் உடல் அழிந்தது.

சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணைத் திறந்ததால் ஆற்றல் செறிந்த அவரது பார்வையைத் தாங்கமுடியாமல் காமனின் உடல் சாம்பலானது. காமனின் மனைவி ரதியின் (மனக்கிளர்ச்சி) வேண்டுதலுக்கு இணங்க சிவபெருமான் அவரை உயிர்ப்பித்தார். ஆனால் உணர்வுவழி மட்டுமே அன்பை வெளிப்படுத்தக்கூடிய, ஆனாலும் காமத்தை வெளிப்படுத்த முடியாத, அருவ உருவத்தை அவருக்கு உருவாக்கினார். இந்த நிகழ்வினை நினைவுகூரும் வகையிலேயே ஹோலி கொண்டாடப்படுவதாக நம்பப்படுகிறது.

அதனால் தான்,மக்கள் ஹோலி நாளில் மாம்பழ பூக்கள் மற்றும் சந்தன பசை கலவையை கொண்டு சார்த்தி காமதேவன் வழிபாடு நடத்துகின்றனர்.

இப்பண்டிகையின் போது பூசப்படும் வண்ணங்கள் ஆயிர்வேத மூலிகைகளான வேப்பிலை, குங்குமம், மஞ்சள், வில்வம், போன்றவற்றால் செய்யபடுவதால் மருத்துவ நன்மைகள் கிடைக்கிறது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்