பெருமாள் உங்கள் வீட்டிற்கு வரவேண்டுமா? இந்த ஆலயத்திற்கு செல்லுங்கள்

Report Print Gokulan Gokulan in ஆன்மீகம்
199Shares
199Shares
lankasrimarket.com

எல்லோருமே ஆலயங்களுக்கு சென்று தீபமேற்றி வழிபடுவார்கள், ஆனால் சில ஆலயங்களுக்கு சென்று தீபமேற்றினால் அதனால் கிடைக்கின்ற பலன்கள் ஏராளாம்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோட்டியூரில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று நெய் விளக்கேற்றினால் வாழ்வில் நாம் சந்திக்கின்ற துயரங்கள் நீங்கும்.

பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஒன்றான இக்கோயிலில் மாசிமாதம் இடம்பெறுகின்ற திருவிழா பெரிதும் விக்ஷேசமானதாக சொல்லப்படுகின்றது.

விழாக்காலத்தில் அங்கு நடைபெறுகின்ற விளக்கு பிரார்த்தனை மிகவும் பிரசித்தி பெற்றது.

பொதுவாக நாம் ஆலயங்களிற்கு சென்று விளக்கேற்றினால் விளக்கை கோவிலிலேயே வைத்துவிடுவோம். ஆனால், இந்த ஆலயத்தில் நாம் ஏற்றிய விளக்கினை வீட்டிற்கு எடுத்து செல்லலாம்.

விளக்கினை ஏற்றும்போது பெருமாளிடம் ஏதாவது கோரிக்கையினை நிறைவேற்ற வேண்டுமென வேண்டிகொண்டு பக்தர்கள் அங்குள்ள தெப்பக்குளத்தை சுற்றி இரண்டு விளக்குகளை ஏற்றுவார்கள்.

அப்படி அங்கே ஏற்றும் விளக்கு எரிந்து முடிந்ததும் அதனை வீட்டிற்கு எடுத்து செல்லும் வழக்கமும் உள்ளது.

குறித்த விளக்கினை வீட்டின் பூஜை அறையில் வைத்து பெருமாளிடம் வேண்டிக்கொண்ட பிரார்த்தனை நிறைவேறும் வரை அதனை தினமும் ஏற்றவேண்டும்.

அப்படி விளக்கேற்றும்போது, விளக்கில் ஒளி வடிவில் பெருமாள் வந்து, நாம் வேண்டியவற்றை நிறைவேற்றுவார் என்பது ஐதீகம்.

பக்தர்களின் பிரார்த்தனை நிறைவடைந்ததும் மீண்டும் அடுத்த வருடம் தெப்போற்சவத்திற்கு சென்று பழைய விளக்கோடு சென்று, 5 , 7 , 9 போன்ற எண்ணிக்கையில் பல விளக்குகளை பக்தர்கள் ஏற்றி பெருமாளிற்கு நன்றி கூறுகின்றனர்.

இந்த வழிபாட்டு முறையை மற்ற நாட்களிலும் செய்யலாம். அதற்கு கோயிலில் உள்ள பட்டாச்சாரியாரிடம் கேட்டு சரியான முறையினை கடைப்பித்து விளக்கேற்றுவது நன்று.

இந்திரனால் பூஜிக்கப்பட்ட இப் பெருமாள் கதம்ப மகரிக்ஷிக்கு அருள் பாலிக்க இங்கு வந்ததாகவும் கூறப்படுகின்றது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்