காரிய தடைகள் நீங்க வணங்க வேண்டிய கடவுள்

Report Print Gokulan Gokulan in ஆன்மீகம்
246Shares
246Shares
lankasrimarket.com

வாழ்வில் நாம் செய்கின்ற நல்ல காரிய தடைகள் நீங்க சுயம்பு லிங்கங்கமாக உள்ள சிவபெருமானை வணங்கினால் காரியத்தடைகள் நீங்கும்.

தானாக தோன்றிய ஈஸ்வரன் என்பதால் தான் அவரை தான்தோன்றீஸ்வரர் என்றும், சுயம்பு லிங்கம் என்றும் அழைப்பது வழக்கம்.

தமிழகத்தில் பல இடங்களில் சுயம்பு லிங்கங்கள் உள்ளன.

சிவலிங்கம் அமைந்த ஆலயங்களைத் தேடிச் சென்று வழிபட்டால் நினைத்தது நடக்கும்.

ஜென்ம நட்சத்திரம் அன்று சிவபெருமானுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டாலும் நினைத்த காரியம் கை கூடும்.

அதோடு பிரதோஷ நாள் சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள்.

இந்நாளில் பிரதோக்ஷ நேரத்தில் லிங்கவழிபாடும் நந்தியம்பெருமாள் வழிபாடும் செய்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் வாழ்வில் வந்து சேரும்.

மேலும் வைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபட்டாலும் நினைத்த காரியங்கள் தடையின்றி நடக்கும் என்பது ஐதீகம்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்