அறியாமல் நாம் செய்கின்ற தவறுகளிற்கான பரிகாரம்

Report Print Gokulan Gokulan in ஆன்மீகம்
119Shares

நாம் வாழ்வில் 40, 45 வயதைக் கடந்து வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும்போது நாம் யாரையாவது திட்டியிருக்கிறோம், அவமானப்படுத்தியிருக்கிறோம் என்ற சிந்தனை நமக்கு வரும்போது மிகவும் மனவேதனை அடைகின்றோம்.

அவரை அப்படி சொல்லியிருக்கக் கூடாது, அவரைப் போய் அப்படி திட்டிவிட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இப்படிப்பட்ட சிந்தனைகள் வரும்போது, மீண்டும் அவர்களிடம் போய் என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொல்வதற்கான வாய்ப்பும் நமக்கு இருக்காது. இப்படிப்பட்ட மன உளைச்சல் உங்களிற்கு இருக்கும்போது என்ன பரிகாரம் செய்யலாம்.

சிலபேர் இந்த மாதிரியான பாதிப்புகளுக்கெல்லாம், குல தெய்வக் கோயில், சிலர் இஷ்ட தெய்வம் என்று வழிபட்டால் சரியாகும் என சொல்வார்கள் . ஆனால் குலதெய்வம் இருந்தாலும் இந்த கோயிலுக்கு வந்தால்தான் நிம்மதியாக இருக்கும் என்று நினைக்கிறார்களோ அங்கு வந்து உட்கார்ந்து சில ஜபம், தபம் இதெல்லாம் செய்யலாம்.

அவர்களை நினைத்து, அந்த நேரத்தில் இந்த மாதிரியான கேள்வி கேட்டுவிட்டேன். அவர்கள் மனது எவ்வளவு புண்பட்டிருக்கும். கடுமையாக திட்டினேன், வனமையாகக் கண்டித்தேன். சேர வேண்டிய பங்கு சேரவிடாமல் தடுத்தேன், இப்படியெல்லாம் உங்களுடைய மனது வருத்தப்படும்போது,இதை அவர்களுடைய உள் மனது வரை ஆராய்ந்து பாவத்தை நினைத்து வருத்தப்பட்டாலே போதும்.

இதற்கு பதிலாக அவர்களுடைய சந்ததிகளுக்கு இவர்கள் உதவலாம். நான் உங்கள் அண்ணனுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். மிகவும் நெருக்கமாக இருந்தோம். ஒரு காலகட்டத்தில் இரண்டு பேருக்கும் பிரச்சனை வந்துவிட்டது. இருந்தாலும் நான் உன்னை மதிக்கிறேன். உனக்கு ஏதாவது உதவி வேண்மென்றால் சொல், ஏதாவது செய்கிறேன் என்று கூறலாம், இல்லையென்றால் நோகப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு உதவலாம். இவைகே தக்க பரிகாரங்களாகும்.

இவைகளை நீங்கள் செய்துவந்தாலே போதும். மற்றவர்களை வேதனைபடுத்தி விட்டோமே என்கின்ற மன உளைச்சல் உங்களிற்கு இருக்காது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்