குழந்தை கொடி சுற்றி பிறந்தால் நல்லதா? கெட்டதா?

Report Print Kavitha in ஆன்மீகம்
453Shares
453Shares
ibctamil.com

ஒரு குழந்தையில் உடலில் கொடி சுற்றிக் காணப்பட்டால் அந்தக் குழந்தையினால் கெடுபலன்கள் உண்டாக வாய்ப்புள்ளதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

கொடி சுற்றி குழந்தை பிறப்பது நற்பலன் இல்லை இதனால், தந்தையையும், தாயையும் பிரிந்த வாழும் நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஜோதிடத்தில் குழந்தையின் வலது கையில் மாலை போன்ற கொடி சுற்றிக் காணப்பட்டால் சகோதரனுக்கு கெடுதி உண்டாகும்.

இடது கையில் கொடி சுற்றி ஒரு குழந்தை பிறந்தால் தன்னுய சகோதரிக்கு கெடுபலன்கள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

குழந்தையின் உடலில் ஒரு தரம் கொடி சுற்றிக் காணப்பட்டால் அந்தக் குழந்தையின் தாய் மாமனுக்கு எதிர்பாராத விபத்து ஏற்பட்டு, துர்மரணம் உண்டாகும் நிலை அந்த தாய் மாமனுக்கு ஏற்படுகிறது.

இதற்கு சிறந்த பரிகாரத்தை பார்ப்போம்

ஒரு இரும்புச் சட்டியில் தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய எண்ணெய்களை எடுத்துக்கொண்டு குழந்தை பிறக்கும் போது எப்படி கொடி சுற்றிப் பிறந்ததோ அதுபோல வெள்ளியால் கொடி போன்ற அமைப்பு செய்து அந்தக் குழந்தையின் உடம்பில் சுற்ற வேண்டும்.

ஒரு திரை போன்று அமைப்பு ஏற்படுத்தி அதனுள் கிழக்கே பார்ப்பது போல தாயையும் குழந்தையையும் நிறுத்த வேண்டும், திரையின் மறுபுறத்தில் அந்தக் குழந்தையின் குடும்பத்தைச் சேர்ந்த பங்காளிகள் அமரலாம், இப்போது தாயையும், குழந்தையும் ஒரே நேரத்தில் இரும்புச் சட்டியில் உள்ள எண்ணெயைப் பார்க்கச் செய்ய வேண்டும்.

சட்டியில் உள்ள எண்ணெய்யைப் பார்த்தபின் குழந்தையைஅழைத்துக் கொண்டு பக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்குள் சென்று முறையாக வழிபாடு செய்து, 27 முறை வலம் வந்து நன்றாக வணங்கி விட்டு பிரசாதமாகிய விபூதியை நெற்றியில் இட்டுக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் வீடு வந்து, வீட்டில் உள்ள பெரியவர்கள் காலில் அந்தத் தாய் விழுந்து வணங்க வேண்டும்.

இரும்புச் சட்டியில் உள்ள எண்ணெய், வெள்ளியால் செய்யப்பட்ட கொடி, வெற்றிலை, பாக்கு, பூ, பழம், வேட்டி, துண்டு, பணம் ரூ.21 ஆகியவை வைத்து ஏழைக்கு தானம் கொடுக்க வேண்டும், ஏழை, உடல் ஊனமுற்றவராகவோ, நொண்டியாகவோ, முடமாகவோ இருந்தால் உத்தமபலன் ஏற்படும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்