சந்திரனுடன் மற்ற கிரகங்கள் சேர்வதால் கிடைக்கும் பலன்கள் தெரியுமா?

Report Print Kavitha in ஆன்மீகம்
240Shares
240Shares
ibctamil.com

சந்திரனுடன் மற்ற கிரகங்கள் சேர்ந்தால் கிடைக்கும் பலாபலன்கள் என்ன என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

 • ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனுடன், சனிபகவான் இணைந்திருந்தால் ஜாதகர், நல்ல சிறப்பான வசதிகளைப் பெற்றிருத்தல், ஆனால் மனஅமைதிக்கு பங்கம் ஏற்படல் தொழில்/வியாபாரம்/உத்தியோகம் மூலம் நிறையச் சம்பாதிப்பார்கள். இருப்பினும் மனதில் மகிழ்ச்சி இருக்காது. குடும்பத்தில் கருத்துவேறுபாடுகள் இருந்துவரும், பலவித வியாதிகளால் கஷ்டப்படுதல் ஆகியவை அடையப்பெறுவர் என்பதாகும்.
 • ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனுடன் இராகு இணைந்திருந்தால் ஜாதகர் வருவாய்க்கு மிஞ்சிய செலவுகள் வாங்கிய கடன்களைத் திருப்பிக் கொடுக்க இயலாதநிலை, பலவித வியாதிகளால் கஷ்டப்படுதல், பூர்வீகச் சொத்துக்கள் சம்பந்தமாக விவகாரங்களும், வழக்குகளும் ஏற்படுதல், அதனால் அதிகப்படியான பொருள்விரயம் ஆகுதல் ஆகியவை அடையப்பெறுவர் என்பதாகும்.
 • ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனுடன் கேது இணைந்திருந்தால் ஜாதகர் தொழில்/வியாபாரம்/உத்தியோகம் பலவிதமான நெருக்கடிகள் ஏற்படல் எதிர்பார்க்கும் லாபம் இருக்காது,
 • உறவினர்கள்/நண்பர்களிடையே பகை ஏற்பட்டு அனைத்துக் காரியங்களிலும் விரோதமாகச் செயல்படுதல், பூர்வீகச் சொத்துக்கள் அடையப்பெற்றாலும் அவற்றினால் ஏற்படுகின்ற பலாபலன்களை அனுபவிக்க இயலாத நிலை, ஆகியவை அடையப்பெறுவர் என்பதாகும்.
 • செவ்வாய்/அங்காரகன்: செவ்வாய், நெருப்பு/தம்பி, தங்கைகள், உடல் வலிமை, எலும்பின் நடுவிலுள்ள தாது, இரத்தம், வஞ்சம், வைராக்கியம், பொய் பேசுதல், மற்றவர்களின் மனம் புண்படும் வகையில் பேசுதல் ஆகியவற்றிற்கு அதிபதியாக விளங்குகிறார். மேலும், செவ்வாய் உடலில் காயங்கள், கடுமையான புண்களை உண்டாக்குதால், உற்சாகத்தைக் கொடுத்து வீரசாகஸங்களைச் செய்ய வைத்தல், உறவினர்களை பகைவர்களாக்குதல், மனதில் குளுரக் குணத்தை ஏற்படுத்துதல், செல்வச் செழிப்பு, பித்த நோய்களை ஏற்படுத்தல் ஆகியவை அடையப்பெறுவர்.
 • செவ்வாய் ஆதிக்கம் பெற்ற மனிதர்களுக்கு அதிர்ஷ்டநிறம் சிவப்பு, அதிர்ஷ்டம் தரும் கல்-பவழம், அதிர்ஷ்டம் தரும் மலர்-செண்பகம், தானியம்-துவரை, உலோகம்-செம்பு, மரம்-கருங்காலி, திசை-தெற்கு, சுவை-உறைப்பு, செவ்வாய் ராசியைக் கடக்கும் காலம்: 1 1/2 மாதங்கள்.
 • ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயுடன் சூரியன் இணைந்திருந்தால் ஜாதகர், மிகவும் யோகமான பலன்களை அடைவர். தொழில்/வியாபாரம்/உத்தியோகத்தில் சிறப்படைவர்/நிறைய லாபம் பெறுவர். பொன்/பொருள்/ஆபரணங்கள்/சொத்துக்கள் சேர்க்கை மற்றும் வாகன வசதி அடைதல், தமது செல்வாக்கைப் பயன்படுத்திப் பலவித கடினமான காரியங்களை மிகவும் எளிதாகச் சாதித்துக்கொள்ளுதல் ஆகியவை அடையப்பெறுவர் என்பதாகும்.
 • ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயுடன் சந்திரன் இணைந்திருந்தால் ஜாதகர் மிகவும் அதிர்ஷ்டமான பலன்களை அடைவர். தமது வாழ்நாளில் கடைசி வரை செல்வச் செழிப்புடன்/செல்வாக்குடனும்/பூர்வீகச் சொத்துக்களுடனும் வாழ்வர். உயர்ந்த அதிகாரம் செய்யக்கூடிய பதவிகளை அடைவர். மிக்க தெய்வபக்தி அடையப்பெற்றிருப்பர் என்பதாகும்.
 • ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயுடன் புதன் இணைந்திருந்தால் ஜாதகர் மிகவும் சிறப்பான பலன்களை அடைவர். தொழில்/வியாபாரம்/உத்தியோகத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் அடைவர் இவர்கள் பல சாதனைகளைச் செய்து பலருடைய பாராட்டைப்பெறுவர். மேற்கண்ட கிரகங்கள் மிதுனம் அல்லது கன்னி ராசியில் இணைந்திருந்தால் ஜாதகர் ராஜபோக வாழ்க்கையை அடையப்பெறுவர் என்பதாகும்.
 • ஜாதகத்தில் செவ்வாயுடன் குருபகவான் இணைந்திருந்தால் ஜாதகர் மிகவும் சிறப்பான வருவாய் அடைவர் மற்றும் பொன் பொருள்/ஆபரணங்கள்/சொத்துக்கள் சேர்க்கை, வாகன யோகம் மிகவும் மகிழ்ச்சிகரமான நிம்மதியான குடும்ப வாழ்க்கை அடையப்பெறல், தாராளமாக தானம்/தர்மங்கள் செய்தல் ஆகியவை அடையப்பெறுவர். இருப்பினும் லக்னத்திற்கு 7-ம் இல்லத்தில் குருபகவான் அமையப்பெற்றால் ஜாதகருக்கு திருமணம் நடைபெறுவது மிகவும் கடினமாகும்.
 • ஒருவரின் ஜாகதத்தில் செவ்வாயுடன் சுக்கிரன் இணைந்திருந்தால், ஜாதகர் பொதுவாக கலப்புத் திருமணம் நடைபெறல் ஆனால் மணவாழ்க்கை நிறைவாகயிருக்கும். உடன் பிறந்தவர்களிடமிருந்து ஓரளவு உதவிகளைப்பெறுவர். தெய்வீகப்பணிகளில் சிறப்பாகச் செயலாற்று, இறைவனின் அருளைப்பெறுவர் என்பதாகும்.
 • ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயுடன் சனிபகவான் இணைந்திருந்தால் ஜாதகர் சட்டத்திற்குப் புறம்பான காரியங்களைச் செய்வர். காவல் துறையினரால் அடிக்கடி பலவிதமான இன்னல்களை அடைவர். சில சமயம் சிறைவாசமும் அடைவர். தண்ணீர் நெருப்பினால் ஆபத்துக்கள் ஏற்படல் குடும்பத்தில் மகிழ்ச்சி/வசதிகள் அதிகரித்தல் ஆகியவை அடையப்பெறுவர்.
 • ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயுடன் இராகு இணைந்திருந்தால் ஜாதகர் திருவியம் தேடும்பொருட்டு, பல ஊர்களுக்குச் செல்வர். எவ்வளவுதான் சம்பாதித்தாலும், அனைத்தும் விரயமாகும். போதைப்பழக்கத்திற்கு அடிமையாவர். சிற்றின்பத்தில் அதிக நாட்டம் உண்மாகும். நல்ல நண்பர்களை பகைத்துக்கொள்வர். நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்தல் ஆகியவை அடையப்பெறுவர் என்பதாகும்.
 • ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயுடன் கேது இணைந்திருந்தால் ஜாதகர் மிகுதியான தெய்வபக்தி மனதில் இருக்கும். வெளிமாநிலங்கள்/ வெளிநாடுகளைச் சேர்ந்த மனிதர்களிடமிருந்து நல்லவிதமான உதவிகளை அடைதல் பொதுநலசேவைகள் செய்து பலருடைய பாராட்டு, புகழ், வாழ்க்கை வசதி நிறைந்த மகிழ்ச்சி ஆகியவை அடையப்பெறுவர் என்பதாகும்.

- Dina Mani

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்