சுக்கிர பெயர்ச்சியின் முக்கியத்துவம் என்ன தெரியுமா?

Report Print Kavitha in ஆன்மீகம்

குருபெயர்ச்சிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றதோ அதே மாதிரி தான் சுக்கிர பெயர்ச்சியும் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகின்றது.

சுக்கிரன் என்றால் இன்பம் என்று பொருள் கொள்ளலாம். அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர்.

சுக்கிரனை மழைக் கோள் என்றும் அழைக்கப்படுவது.

சுக்கிரன் சராசரியாக 28 நாட்கள், 30 நாட்கள் ஒரு வீட்டில் இருக்கக் கூடியவர்.

சுக்கிரன் இருக்கக் கூடிய வீடுகள், அவர் பார்வை படும் வீடுகள் ஆகியவற்றைக் கொண்டுதான் மழை பொழிதல் ஜோதிட ரீதியாக கணக்கிடப்படுகிறது என்று சொல்லப்படுகின்றது.

இப்படிப்பட்ட நிகழ்வுகளின் போது சுக்கிரன் மறைந்திருக்கக் கூடாது என்பது ஜதீகம்.

சுக்கிரனை வெள்ளி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுவதுண்டு.

வீடு கட்டுவது, குடி போவது ஆகிய நிகழ்வுகளுக்கும் சுக்கிரன் முக்கியமானது. ஏனென்றால் வீடு கட்டி குடி போகிறோம் என்றால் வெள்ளி எதிரில் இருக்கக் கூடாது.

அதாவது எந்த திசையை நோக்கி நாம் வீடு குடிபோகிறோமோ அந்த திசைக்கு நேர் எதிராக வெள்ளி இருக்கக் கூடாது. அப்படி இருந்ததென்றால் அது ஆபத்தை உண்டாக்கி விடுமாம்.

அதேபோல் வெள்ளிக்கு ஆன்மீக சக்தியும் அதிகம் உள்ளது. ஹோமம் செய்யும்போதெல்லாம் வெள்ளியில் செய்த பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்ற ஐதீகமும் உண்டு.

இப்படி சுக்கிரனின் அம்சங்கள் நிறைய உண்டு. சுக்கிரனும், குருவும் ஒரே வீட்டில் இருந்தால் மூடம் என்று சொல்வார்கள்.

அந்த நாட்களில் திருமணம் செய்யக் கூடாது, வீடு குடிபோகக் கூடாது, வீடு கட்டத் தொடங்கக் கூடாது. அதனால் சுக்கிரனை அடிப்படையாக வைத்து பல விடயங்கள் உள்ளன.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்