உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருக்க? இனிமேல் இதையெல்லாம் செய்யாதீங்க!

Report Print Jayapradha in ஆன்மீகம்

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தையும், செய்யக்கூடாதவைகளையும் பற்றி பார்ப்போம்.

பரிகாரம் செய்யவேண்டிய நேரம்
  • சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயரம் துக்கம், நீக்கும் பரிகாரங்களை தேய் பட்சத்திலும் செய்ய வேண்டும்.
  • குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சந்நிதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம்.
  • செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையில் பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.
பரிகாரம் செய்யகூடாத நேரம்
  • ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள் செய்யக்கூடாது.
  • பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது.
  • மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் 4, 8, 12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.
செவ்வாய் தோஷம் போக்க
  • செவ்வாய்க்குரிய அதிதேவதையான முருகனை வழிபடுவது கோதுமை ரொட்டி, வெள்ளை எள் கலந்த இனிப்பு பலகாரங்கள், துவரை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் கொடுப்பது நல்லது.
  • செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து செவ்வாய் பகவானுக்கு விளக்கேற்றுவது, சஷ்டி விரதம், கிருத்திகை விரதம் மேற்கொள்வது, தினமும் கந்தசஷ்டி கவசம் படிப்பதுநல்லது.
  • செவ்வாய்க்குரிய கல்லான பவளக்கல்லை மோதிரத்தில் பதித்து அணிவது சிவப்பு நிற ஆடையை அணிந்து கொள்வது, செப்புப் பாத்திரங்களை உபயோகிப்பது போன்றவற்றால் செவ்வாயால் உண்டாகக்கூடிய தோஷங்கள் குறையும்.
  • செவ்வாய்க்கு செய்யும் பரிகாரங்கள் அனைத்தும் முருகனுக்கு உகந்தது என்பதால் முருகனின் திருவருளும் கிட்டும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers